• May 18 2024

திருகோணமலை மாவட்டத்தில் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில்! samugammedia

Tamil nila / Nov 13th 2023, 8:26 pm
image

Advertisement

திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன்கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த காற்றுடன்கூடிய மழையின் காரணமாக வெருகல் ஊப்பூரல் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார். 



மேலதிக சேதங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை நகரை அண்மித்த கன்னியா பீலியடி பகுதி உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளததன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடிகான் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.


திருகோணமலை மாவட்டத்தில் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் samugammedia திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன்கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த காற்றுடன்கூடிய மழையின் காரணமாக வெருகல் ஊப்பூரல் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார். மேலதிக சேதங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் திருகோணமலை நகரை அண்மித்த கன்னியா பீலியடி பகுதி உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளததன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடிகான் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement