வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
ஒடிஸி ரயிலுக்காக ஒன்லைனில் வாங்கிய 21 ரயில் டிக்கெட்டுகளும், அந்த ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130,670 ரூபாய் பணமும்,
இதற்கு முன்னர் ரயில் டிக்கெட் விற்பனை பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட 130 குறிப்புகளும், கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி - ஒருவர் கைது வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.ஒடிஸி ரயிலுக்காக ஒன்லைனில் வாங்கிய 21 ரயில் டிக்கெட்டுகளும், அந்த ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130,670 ரூபாய் பணமும், இதற்கு முன்னர் ரயில் டிக்கெட் விற்பனை பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட 130 குறிப்புகளும், கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.