• Oct 05 2024

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை துன்புறுத்திய கணவர் - பொலிஸ் நிலையம் சென்ற மனைவி! SamugamMedia

Chithra / Feb 28th 2023, 2:20 pm
image

Advertisement

புலத்சிங்கள பிரதேசத்தில் தனது கணவர் துன்புறுத்தல் செய்வதாக கூறி 2 பிள்ளைகளின் தாயான பிலிப்பைன்ஸ் பெண் பொலிஸ் அவசர இலத்திற்கு நேற்று அழைப்பேற்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் மீண்டும் தனது கணவருடன் வாழ வீட்டிற்கு செல்ல முடியாதென கூறி பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.

புலத்சிங்கள கதன்வாடிய 50 ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அந்த நாட்டு பெண்ணுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் இலங்கைக்கு வருகைத்தந்து இலங்கையின் சட்டத்திற்கமைய, திருமணம் செய்து கந்தன்வாடிய பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 5 வயதுடைய பெண் பிள்ளை மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தையும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

40 வயதுடைய இந்த பெண் தனது கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் தொடர்ந்து சண்டை ஏற்படுவதனால் வீட்டிற்கு மீண்டும் செல்ல முடியாதென கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் அதிகாரிகள் 33 வயதான கணவரை அழைத்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை துன்புறுத்திய கணவர் - பொலிஸ் நிலையம் சென்ற மனைவி SamugamMedia புலத்சிங்கள பிரதேசத்தில் தனது கணவர் துன்புறுத்தல் செய்வதாக கூறி 2 பிள்ளைகளின் தாயான பிலிப்பைன்ஸ் பெண் பொலிஸ் அவசர இலத்திற்கு நேற்று அழைப்பேற்படுத்தியுள்ளார்.அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் மீண்டும் தனது கணவருடன் வாழ வீட்டிற்கு செல்ல முடியாதென கூறி பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.புலத்சிங்கள கதன்வாடிய 50 ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அந்த நாட்டு பெண்ணுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் இலங்கைக்கு வருகைத்தந்து இலங்கையின் சட்டத்திற்கமைய, திருமணம் செய்து கந்தன்வாடிய பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 5 வயதுடைய பெண் பிள்ளை மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தையும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.40 வயதுடைய இந்த பெண் தனது கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் தொடர்ந்து சண்டை ஏற்படுவதனால் வீட்டிற்கு மீண்டும் செல்ல முடியாதென கூறியுள்ளார்.இது தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் அதிகாரிகள் 33 வயதான கணவரை அழைத்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement