• Mar 17 2025

பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் கற்களால் தாக்கப்பட்டு மரணம்

Chithra / Mar 16th 2025, 9:31 am
image

  

கொழும்பு, கொஹுவல பகுதியில்  மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.

கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் மாணவன் ஒருவனின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை நேரில் பார்த்த ஒரு குழு, பணத்தை பறிக்க முயன்றவரை  கற்களால் தாக்கி விரட்டியடித்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் கொஹுவல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பணத்தை கொள்ளையடித்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் கற்களால் தாக்கப்பட்டு மரணம்   கொழும்பு, கொஹுவல பகுதியில்  மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் மாணவன் ஒருவனின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை நேரில் பார்த்த ஒரு குழு, பணத்தை பறிக்க முயன்றவரை  கற்களால் தாக்கி விரட்டியடித்தனர்.தாக்குதலுக்குப் பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் கொஹுவல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பணத்தை கொள்ளையடித்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement