• Jan 08 2025

மாமனாரை குத்திக்கொன்ற மருமகன் - வாக்குவாதம் முற்றியதில் பயங்கரம்

Chithra / Dec 31st 2024, 12:53 pm
image

 

புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை, கிலவமடுச்சேனை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கூரிய அயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது பெரும் கைகலப்பாக மாறியதுடன், அதனை சமரசத்திற்கு கொண்டுவர முயற்சி செய்த மாமாவே, மருமகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி - கிலவமடுச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தொம்பகஹ பத்திரனகே டைட்டஸ் ரோஹன் பீரிஸ்  எனும்  56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது, தனது சிறிய மகனின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற மைத்துனர், அங்கு கடும் வாய்தர்க்கத்திலும், மோதலிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தனது மகனுக்கும், மருமகனுக்கும் இடையே இடம்பெற்ற சண்டையை பிரிக்கமுற்பட்ட போது, மருமகன் மறைத்து வைத்திருந்த  கூரிய ஆயுதத்தினால் தனது மகனை குத்திக் காயப்படுத்த முயற்சி செய்துள்ளார் எனவும், 

அதனை தடுக்க முற்பட்ட மாமா மீது மருமகன் கூரிய ஆயுதத்தினால் குத்திக் காயப்படுத்தியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த மாமாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மாமனாரை குத்திக்கொன்ற மருமகன் - வாக்குவாதம் முற்றியதில் பயங்கரம்  புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை, கிலவமடுச்சேனை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கூரிய அயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது பெரும் கைகலப்பாக மாறியதுடன், அதனை சமரசத்திற்கு கொண்டுவர முயற்சி செய்த மாமாவே, மருமகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மதுரங்குளி - கிலவமடுச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தொம்பகஹ பத்திரனகே டைட்டஸ் ரோஹன் பீரிஸ்  எனும்  56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சம்பவம் இடம்பெற்றபோது, தனது சிறிய மகனின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற மைத்துனர், அங்கு கடும் வாய்தர்க்கத்திலும், மோதலிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, தனது மகனுக்கும், மருமகனுக்கும் இடையே இடம்பெற்ற சண்டையை பிரிக்கமுற்பட்ட போது, மருமகன் மறைத்து வைத்திருந்த  கூரிய ஆயுதத்தினால் தனது மகனை குத்திக் காயப்படுத்த முயற்சி செய்துள்ளார் எனவும், அதனை தடுக்க முற்பட்ட மாமா மீது மருமகன் கூரிய ஆயுதத்தினால் குத்திக் காயப்படுத்தியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதன்போது, படுகாயமடைந்த மாமாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement