அமெரிக்காவில் மருத்துவ உலங்கு வானூர்தி விபத்து; உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர்!

131

அமெரிக்காவில் மருத்துவ உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த உலங்கு வானூர்தி, தேவாலயம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நோய் வாய்ப்பட்ட குழந்தையை, செவிலியர் ஒருவர் மருத்துவ உலங்கு வானூர்தியில் பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த மாகாணத்தின் மேற்குப்பகுதியில் குடியிருப்புகளிடையே அமைந்துள்ள தேவாலயம் அருகே சென்ற போது, உலங்கு வானூர்தி திடீரென விழுந்து நொறுங்கியது.

இதில் உள்ளே இருந்த குழந்தை, செவிலியர், விமானி உட்பட 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது