• Feb 02 2025

திருமலை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி திடீர் விஜயம்..!

Sharmi / Feb 1st 2025, 5:40 pm
image

திருகோணமலை மாவட்ட புல்மோட்டையில் உள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(01) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

குறித்த விஜயத்தின் போது கனிய மணல் அகழ்வு பணி மற்றும் அதன் மூலமான வருமானத்தை அதிகரித்து இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தனர்.

குறித்த கூட்டுத்தாபன ஊழியர்களுடன் இதன் போது கலந்துரையாடலில் ஈடுபட்டு எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் முறையான மணல் அகழ்வினை மேற்கொள்ளவும் வருமானத்தை அதிகரிக்க கூடிய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. 

குறித்த நிறுவனத்தில் உள்ள சகல தொழில் நுட்ப கனரக இயந்திரங்கள் , தொழிற் சாலை உபகரணங்களையும் பார்வையிட்டார்.

குறித்த விஜயத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை  பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


திருமலை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி திடீர் விஜயம். திருகோணமலை மாவட்ட புல்மோட்டையில் உள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(01) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.குறித்த விஜயத்தின் போது கனிய மணல் அகழ்வு பணி மற்றும் அதன் மூலமான வருமானத்தை அதிகரித்து இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தனர்.குறித்த கூட்டுத்தாபன ஊழியர்களுடன் இதன் போது கலந்துரையாடலில் ஈடுபட்டு எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் முறையான மணல் அகழ்வினை மேற்கொள்ளவும் வருமானத்தை அதிகரிக்க கூடிய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. குறித்த நிறுவனத்தில் உள்ள சகல தொழில் நுட்ப கனரக இயந்திரங்கள் , தொழிற் சாலை உபகரணங்களையும் பார்வையிட்டார்.குறித்த விஜயத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை  பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement