• Jun 29 2024

மோட்டார் சைக்கிள் - கார் விபத்து! சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia

Chithra / Apr 24th 2023, 6:26 pm
image

Advertisement

3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையகாவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இவ்விபத்து நேற்றிரவு இரவு இடம்பெற்றது.

இதன் போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதுண்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த மூன்று சிறுவர்கள் மற்றும் கார் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிகக்ப்பட்டனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் சுமார் 15 வயது 16 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சாரதி அனுமதி பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றமை விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.


மோட்டார் சைக்கிள் - கார் விபத்து சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையகாவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இவ்விபத்து நேற்றிரவு இரவு இடம்பெற்றது.இதன் போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதுண்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த மூன்று சிறுவர்கள் மற்றும் கார் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிகக்ப்பட்டனர்.மேலும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் சுமார் 15 வயது 16 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சாரதி அனுமதி பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றமை விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement