நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டு 11 நாட்கள் கடந்த போதிலும் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொலிஸார் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காணமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக பொலிஸாரிடம் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தம்மால் இன்னும் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதெவேளை நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
குணதிலக்க ராஜபக்ஷ ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்தவால் தாக்கப்பட்ட எம்.பி. - சட்ட நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்றில் வெளியிடவுள்ள அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டு 11 நாட்கள் கடந்த போதிலும் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பொலிஸார் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் கூறியுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காணமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக பொலிஸாரிடம் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் தம்மால் இன்னும் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதெவேளை நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.குணதிலக்க ராஜபக்ஷ ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சுட்டிக்காட்டியுள்ளார்.