சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு நகர்த்துவதற்கு சதி முயற்சிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயம் குறித்து அண்மையில் நாடாளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அண்மையில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் பிரவேசித்திருந்தனர்.
எதிர்வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் கடத்தும் திட்டம் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு சட்டவிரோத குடியேறிகளின் வருகை பல்வேறு சிக்கல்களையும் தேவையற்ற சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறிகளை தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பில் கடற்படை சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு நகர்த்துவதற்கு சதி முயற்சிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயம் குறித்து அண்மையில் நாடாளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.அண்மையில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் பிரவேசித்திருந்தனர்.எதிர்வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் கடத்தும் திட்டம் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டுக்கு சட்டவிரோத குடியேறிகளின் வருகை பல்வேறு சிக்கல்களையும் தேவையற்ற சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக குடியேறிகளை தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.