தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும்(04) நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹோமாகம, கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், சீரற்ற காலநிலை மற்றும் அதன் தாக்கத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகளை நடத்துவது மற்றும் விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் எடுக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு. தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும்(04) நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.மேலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், ஹோமாகம, கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையில், சீரற்ற காலநிலை மற்றும் அதன் தாக்கத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகளை நடத்துவது மற்றும் விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் எடுக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.