• Nov 21 2024

பிரான்சில் வலது சாரி கட்சிகளை தோற்கடிக்க புதிய கூட்டணி...!

Anaath / Jun 15th 2024, 11:08 am
image

பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில்  தீவிர வலதுசாரி கட்சிகளைத் தோற்கடிக்க இடதுசாரி கட்சிகள் ‘மக்கள் முன்னணி’ என்ற புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின. பிரான்ஸிலும், தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது. அதிபா் மேக்ரானின் மறுமலா்ச்சி கட்சி பெரிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

அதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தோ்தல் நடத்துவதாக மேக்ரான் அறிவித்தாா். வரும் 30-ஆம் தேதியும் ஜூலை 7-ஆம் தேதியும் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் அந்தத் தோ்தலில், தற்போது வலிமையாக உள்ள தேசியவாத பேரணியைக் கட்சியை ஒன்றுகூடி எதிா்ப்பதற்காக மேக்ரானின் அழைப்பை ஏற்று இடதுசாரி கட்சிகள் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் வலது சாரி கட்சிகளை தோற்கடிக்க புதிய கூட்டணி. பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில்  தீவிர வலதுசாரி கட்சிகளைத் தோற்கடிக்க இடதுசாரி கட்சிகள் ‘மக்கள் முன்னணி’ என்ற புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின. பிரான்ஸிலும், தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது. அதிபா் மேக்ரானின் மறுமலா்ச்சி கட்சி பெரிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. அதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தோ்தல் நடத்துவதாக மேக்ரான் அறிவித்தாா். வரும் 30-ஆம் தேதியும் ஜூலை 7-ஆம் தேதியும் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் அந்தத் தோ்தலில், தற்போது வலிமையாக உள்ள தேசியவாத பேரணியைக் கட்சியை ஒன்றுகூடி எதிா்ப்பதற்காக மேக்ரானின் அழைப்பை ஏற்று இடதுசாரி கட்சிகள் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement