• Nov 23 2024

இணையவழி கடன் மோசடிக்கு எதிராக புதிய சட்டம்..! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Jan 12th 2024, 1:11 pm
image

 

இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை நிகர நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், 

ஆனால் இணையவழி கடன் கடத்தல் போன்ற விடயங்களை சட்டமூலத்தில் முழுமையாக உள்ளடக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி கடன் பரிமுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பாரிய ஆபத்தான நிலை என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

இணையவழி கடன் மோசடிக்கு எதிராக புதிய சட்டம். இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை  இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை நிகர நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், ஆனால் இணையவழி கடன் கடத்தல் போன்ற விடயங்களை சட்டமூலத்தில் முழுமையாக உள்ளடக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இணையவழி கடன் பரிமுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது ஒரு பாரிய ஆபத்தான நிலை என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement