• May 07 2024

இந்தோனேசியாவில் புதிய சட்டம்-ஏன் தெரியுமா?

Sharmi / Dec 7th 2022, 11:24 pm
image

Advertisement

இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சட்டத்திருத்தம் நேற்றைய தினம் (06) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிச எதிர்ப்பு கொள்கை என்பது வளர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இக்கொள்கை பின்பற்றப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வழக்கமாக மதம் சார்ந்த நாடுகளில் கம்யூனிச அமைப்புகள், கட்சிகள் தடை செய்யப்படுவது இயல்புதான்.

அமெரிக்கா கூட சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்இ 'கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதி கோர முடியாது' என்று கூறியிருந்தது.

நேற்றைய தினம்  அந்நாட்டு நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அந்த மசோதாவில், திருமணத்தை தாண்டிய உறவு, கருக்கலைப்பு, முற்போக்கு அரசியலை பரப்புவது தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிய-லெனினிச அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகளும், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு சட்டத்தை திருத்தி இருக்கிறது. இதில் கருக்கலைப்பு சட்டத்தை பொறுத்த அளவில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

புதிய சட்டத்தில் தன்பால் ஈர்ப்பாலர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மரணை தண்டனையை அந்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், இந்த முறை மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தில் மரண தண்டனை நீட்டிக்கப்படுவதாகவும், ஆனால் வேறு வழியே இல்லாத நிலையில் இது பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் இந்த புதிய சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவானது, முழுமையாக அமூலாக 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் இன்னும் இதில் கையெழுத்திடவில்லை.

கம்யூனிச எதிர்ப்பு என்பது தொடக்கத்திலிருந்தே நீடித்து வருகிறது. 1965-66 காலகட்டத்தில் இந்நாட்டில் அமெரிக்க பின்னணியுடன் இராணுவ புரட்சி ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் புதிய அதிபராக 'சுஹார்டோ' பதவியேற்றார். இதுதான் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கான இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. அதுவரையில் உலக அளவில் நான்காவது மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஆண்டில் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் புதிய சட்டம்-ஏன் தெரியுமா இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சட்டத்திருத்தம் நேற்றைய தினம் (06) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்யூனிச எதிர்ப்பு கொள்கை என்பது வளர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இக்கொள்கை பின்பற்றப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வழக்கமாக மதம் சார்ந்த நாடுகளில் கம்யூனிச அமைப்புகள், கட்சிகள் தடை செய்யப்படுவது இயல்புதான்.அமெரிக்கா கூட சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்இ 'கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதி கோர முடியாது' என்று கூறியிருந்தது.நேற்றைய தினம்  அந்நாட்டு நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அந்த மசோதாவில், திருமணத்தை தாண்டிய உறவு, கருக்கலைப்பு, முற்போக்கு அரசியலை பரப்புவது தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிய-லெனினிச அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகளும், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு சட்டத்தை திருத்தி இருக்கிறது. இதில் கருக்கலைப்பு சட்டத்தை பொறுத்த அளவில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.புதிய சட்டத்தில் தன்பால் ஈர்ப்பாலர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மரணை தண்டனையை அந்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், இந்த முறை மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தில் மரண தண்டனை நீட்டிக்கப்படுவதாகவும், ஆனால் வேறு வழியே இல்லாத நிலையில் இது பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் இந்த புதிய சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவானது, முழுமையாக அமூலாக 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் இன்னும் இதில் கையெழுத்திடவில்லை.கம்யூனிச எதிர்ப்பு என்பது தொடக்கத்திலிருந்தே நீடித்து வருகிறது. 1965-66 காலகட்டத்தில் இந்நாட்டில் அமெரிக்க பின்னணியுடன் இராணுவ புரட்சி ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் புதிய அதிபராக 'சுஹார்டோ' பதவியேற்றார். இதுதான் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கான இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. அதுவரையில் உலக அளவில் நான்காவது மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஆண்டில் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement