சர்வதேச டெஸ்ட கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து

287

சர்வதேச டெஸ்ட கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி மீண்டும் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில், முதலாம் இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 இற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியை தொடர்ந்து 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா அணி 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் சர்வதேச டெஸ்ட கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: