• Apr 02 2025

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - ஆதரவளிக்க பல எதிர்க்கட்சிகள் தயார்..!

Chithra / Feb 6th 2024, 10:54 am
image

 

சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க பல எதிர்க்கட்சி அரசியல் குழுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக ‘சுதந்திர மக்கள் சபை’ அறிவித்துள்ளது.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாக சுதந்திர மக்கள் சபையின் மூத்த பிரதிநிதி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றியடையச் செய்வதற்கு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் தெரிவித்தார்.

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டமை முற்றிலும் தவறானது எனவும் அதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர், அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - ஆதரவளிக்க பல எதிர்க்கட்சிகள் தயார்.  சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க பல எதிர்க்கட்சி அரசியல் குழுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக ‘சுதந்திர மக்கள் சபை’ அறிவித்துள்ளது.தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாக சுதந்திர மக்கள் சபையின் மூத்த பிரதிநிதி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றியடையச் செய்வதற்கு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் தெரிவித்தார்.இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டமை முற்றிலும் தவறானது எனவும் அதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் தெரிவித்திருந்தார்.சமீபத்தில், இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர், அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement