• Oct 28 2024

ஜனாதிபதி ரணில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு இல்லை..! அமைச்சர் பிரசன்ன அதிரடி

Chithra / Apr 2nd 2024, 3:50 pm
image

Advertisement


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை எதிரணியினர் என்ன சொன்னாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை.

தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னமோ, மொட்டு சின்னமோ அல்ல, பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமானால் அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்

இதேவேளை நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சியில் கலந்துரையாடல் இல்லை எனவும் நாமல் ஜனாதிபதி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு இல்லை. அமைச்சர் பிரசன்ன அதிரடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.இதேவேளை எதிரணியினர் என்ன சொன்னாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை.தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னமோ, மொட்டு சின்னமோ அல்ல, பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும்.ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமானால் அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்இதேவேளை நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சியில் கலந்துரையாடல் இல்லை எனவும் நாமல் ஜனாதிபதி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement