• May 06 2024

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது...!

Sharmi / Apr 2nd 2024, 3:50 pm
image

Advertisement

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் மாம்புரி பகுதியிலிருந்து மதுரங்குளி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர், புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(02) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு செல்லவுள்ளதாக புத்தளம் பிராந்திய மூத்த கண்காணிப்பு பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் மாம்புறி திடல் பகுதியில்  லொறியினை மறைத்து சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர். 

இதன்போது சுமார் 49 உறைகளில் 1435 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுரங்குளிப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புத்தளம் மாம்புரி பகுதியிலிருந்து மதுரங்குளி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர், புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(02) அதிகாலை கைது செய்துள்ளனர்.இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு செல்லவுள்ளதாக புத்தளம் பிராந்திய மூத்த கண்காணிப்பு பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் மாம்புறி திடல் பகுதியில்  லொறியினை மறைத்து சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர். இதன்போது சுமார் 49 உறைகளில் 1435 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுரங்குளிப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டுள்ளன.குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement