• May 10 2024

தமிழினத்தின் கருவை அறுத்து ரணிலின் காலில் விழுந்து பதவியைப் பிடிக்கும் வடக்கு ஆளுநர்! கஜேந்திரன் எம்.பி. காட்டம் samugammedia

Chithra / Mar 28th 2023, 12:52 pm
image

Advertisement

நாவலர் கலாச்சார மண்டபம்  பூர்வீக அடையாளங்களில் ஒன்று. அதை புத்தசாசனத்தின் கீழ் வழங்குவதற்காக வடக்கு ஆளுநர் தன்னிச்சையான அதிகார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஆர்ப்பாட்டமொன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண ஆளுநர் தன்னை தமிழனாகக் கூறிக்கொள்கின்ற போதிலும் இனத்தினுடைய கருவையறுத்து ரணிலின் காலில் விழுந்து பதவியைப் பிடிப்பதற்கான நடடிக்கைகளை மேற்கொள்கின்றார்.

தமிழ் தரப்பிலிருந்து 13ம் திருத்தச்சட்டத்தை ஆரம்பமாக சொல்லும் இந்தியாவின் கூலிகள் இதை பற்றிக் கதைப்பதில்லை. 

அவ் அதிகாரங்களினுள் அடங்கும் ஆளுநர் அதிகாரம் மூலமே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

அதனால் மக்கள் எந்நேரமும் தமது உரிமைக்க்காகப்  போராடும் நிலையில் காணப்படுகின்றனர்

வன அபிவிருத்தி திணைக்களம், தொல்லியற் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களம்

இவற்றுடன்   மடடக்களப்பில் மயிலத்தமனை பகுதியிலிருந்து திட்டமிட்டு மேய்ச்சல் தரைகளிள் மாடுகள் கொல்லப்படும் நிலை நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவிலும் எமது விவசாய நிலங்கள் திட்டமிட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

கொக்குத்தொடுவாய்  பூமாரி வயலில் இயந்திரத்துடன் நுழைந்த பெரும்பான்மையினரைச் சேர்ந்த ஒருவர் நெல்லை அறுவடை செய்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிசில் முறையிட்ட போதும் லெறும் 3 மூட்டைகளையே பெற்றுக் கொடுத்துள்ளனர்

கடந்த காலகளி்ல் சிங்களவர்கள் ஆளுநர் பதவியில் நியமிக்கப்படுகையில் தமிழர் ஒருவர் பதவியில் நியமிக்கப்பட்டால் இலகுவாக விடயங்களைக் கையாள முடியுமெனப்  பல மேதாவிகள் கூறித் திரிந்தனர்.

இது தற்போது அது முற்றிலும் பொய்யாகியுள்ளது.

நாளை வெடியரசன் கோட்டை தொல்பொருட் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கு எதிராக நெடுந்தீவில் ஏற்பாடு செய்யப்பட்ட  போராட்டத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வேலணைத்துறையிலிருந்து தனியார் படகுகள் மூலம் போராட்டத்திற்குச் செல்ல ஏற்பாடாகியிருந்த நிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு உட்பட விக்னேஸ்வரன் போன்றோர் அரசுடன் இணங்கி தீர்வினைப் பெற பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையி்ல், தற்பொழுது நாட்டிற்கு தேவையான நிதி வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வு வரவேயில்லை. 

அரசோடு இருக்கும் அங்கயன்,அமைச்சர் டக்ளஸ் மற்றும் பிள்ளையான் உள்ளிட்டோர் பதவியிலிருந்து ஒதுங்கி தமிழினம் இனி வருங்காலத்திவாவது நிம்மதியுடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும். இல்லையெனின்   தென்னிலங்கையில் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் போல் இவர்களுக்கும் மக்கள் மிக விரைவில் தக்க பாடம் புகட்டுவர். - என்றார்

தமிழினத்தின் கருவை அறுத்து ரணிலின் காலில் விழுந்து பதவியைப் பிடிக்கும் வடக்கு ஆளுநர் கஜேந்திரன் எம்.பி. காட்டம் samugammedia நாவலர் கலாச்சார மண்டபம்  பூர்வீக அடையாளங்களில் ஒன்று. அதை புத்தசாசனத்தின் கீழ் வழங்குவதற்காக வடக்கு ஆளுநர் தன்னிச்சையான அதிகார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஆர்ப்பாட்டமொன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,வட மாகாண ஆளுநர் தன்னை தமிழனாகக் கூறிக்கொள்கின்ற போதிலும் இனத்தினுடைய கருவையறுத்து ரணிலின் காலில் விழுந்து பதவியைப் பிடிப்பதற்கான நடடிக்கைகளை மேற்கொள்கின்றார்.தமிழ் தரப்பிலிருந்து 13ம் திருத்தச்சட்டத்தை ஆரம்பமாக சொல்லும் இந்தியாவின் கூலிகள் இதை பற்றிக் கதைப்பதில்லை. அவ் அதிகாரங்களினுள் அடங்கும் ஆளுநர் அதிகாரம் மூலமே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனால் மக்கள் எந்நேரமும் தமது உரிமைக்க்காகப்  போராடும் நிலையில் காணப்படுகின்றனர்வன அபிவிருத்தி திணைக்களம், தொல்லியற் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களம்இவற்றுடன்   மடடக்களப்பில் மயிலத்தமனை பகுதியிலிருந்து திட்டமிட்டு மேய்ச்சல் தரைகளிள் மாடுகள் கொல்லப்படும் நிலை நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது.முல்லைத்தீவிலும் எமது விவசாய நிலங்கள் திட்டமிட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.கொக்குத்தொடுவாய்  பூமாரி வயலில் இயந்திரத்துடன் நுழைந்த பெரும்பான்மையினரைச் சேர்ந்த ஒருவர் நெல்லை அறுவடை செய்து சென்றுள்ளார்.இது தொடர்பில் பொலிசில் முறையிட்ட போதும் லெறும் 3 மூட்டைகளையே பெற்றுக் கொடுத்துள்ளனர்கடந்த காலகளி்ல் சிங்களவர்கள் ஆளுநர் பதவியில் நியமிக்கப்படுகையில் தமிழர் ஒருவர் பதவியில் நியமிக்கப்பட்டால் இலகுவாக விடயங்களைக் கையாள முடியுமெனப்  பல மேதாவிகள் கூறித் திரிந்தனர்.இது தற்போது அது முற்றிலும் பொய்யாகியுள்ளது.நாளை வெடியரசன் கோட்டை தொல்பொருட் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கு எதிராக நெடுந்தீவில் ஏற்பாடு செய்யப்பட்ட  போராட்டத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.வேலணைத்துறையிலிருந்து தனியார் படகுகள் மூலம் போராட்டத்திற்குச் செல்ல ஏற்பாடாகியிருந்த நிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கூட்டமைப்பு உட்பட விக்னேஸ்வரன் போன்றோர் அரசுடன் இணங்கி தீர்வினைப் பெற பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையி்ல், தற்பொழுது நாட்டிற்கு தேவையான நிதி வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வு வரவேயில்லை. அரசோடு இருக்கும் அங்கயன்,அமைச்சர் டக்ளஸ் மற்றும் பிள்ளையான் உள்ளிட்டோர் பதவியிலிருந்து ஒதுங்கி தமிழினம் இனி வருங்காலத்திவாவது நிம்மதியுடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும். இல்லையெனின்   தென்னிலங்கையில் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் போல் இவர்களுக்கும் மக்கள் மிக விரைவில் தக்க பாடம் புகட்டுவர். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement