• Jun 26 2024

வவுனியாவில் போராளிகளுக்காக திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் samugammedia

Chithra / Jul 9th 2023, 1:25 pm
image

Advertisement

போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது இன்றையதினம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

வவுனியா ஆலடி வீதி - தோணிக்கல் பகுதியில் போராளிகளின் நலன் சார்ந்து அமைக்கப்பட்ட போராளிகள் நலன் புரிச்சங்கத்தின் அலுவலகமானது இன்று (09) காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கான பெயர்ப்பலகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் திரைநீக்கம் செய்யப்பட்டது.

பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களால் அலுவலகமானது நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. 

முன்னாள் போராளி செ.அரவிந்தன் தலைமையில் ஆரம்பமாகியிருந்த குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மூத்த கலைஞர் தமிழ்மணி மேழிக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள் , வடகிழக்கினை சேர்ந்த முன்னாள் போராளிகள் , நலன்புரிசங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


வவுனியாவில் போராளிகளுக்காக திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் samugammedia போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது இன்றையதினம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஆலடி வீதி - தோணிக்கல் பகுதியில் போராளிகளின் நலன் சார்ந்து அமைக்கப்பட்ட போராளிகள் நலன் புரிச்சங்கத்தின் அலுவலகமானது இன்று (09) காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கான பெயர்ப்பலகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் திரைநீக்கம் செய்யப்பட்டது.பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களால் அலுவலகமானது நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. முன்னாள் போராளி செ.அரவிந்தன் தலைமையில் ஆரம்பமாகியிருந்த குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மூத்த கலைஞர் தமிழ்மணி மேழிக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள் , வடகிழக்கினை சேர்ந்த முன்னாள் போராளிகள் , நலன்புரிசங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement