• May 10 2024

போதைப்பொருளுடன் பொலிஸ் குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது...!samugammedia

Sharmi / Nov 11th 2023, 7:07 am
image

Advertisement

திருகோணமலை -நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது அலஸ்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது கைது  செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து  25 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தவரென தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


போதைப்பொருளுடன் பொலிஸ் குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது.samugammedia திருகோணமலை -நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது அலஸ்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது கைது  செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து  25 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தவரென தெரியவருகிறது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement