• May 07 2024

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வெங்காயம்...!samugammedia

Sharmi / Sep 22nd 2023, 11:58 am
image

Advertisement

இங்கிலாந்து நாட்டில் Harrogate நகரில் நடத்தப்பட்ட கண்காட்சியில் 8.97 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெங்காயம் உலக சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இங்கிலாந்தில் இலையுதிர்கால மலர் கண்காட்சி ஒன்று ஹரோ கேட் நகரில் நடத்தப்பட்டுள்ளது.

அதில், வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த விவசாயி கரேத் கிரிஃபின் (Gareth Griffin) என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த  8.97 கிலோ கிராம் எடையைக் கொண்ட வெங்காயத்தை காட்சிப்படுத்தினார்.

இந்நிலையில் குறித்த வெங்காயம் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனையை படைத்துள்ளது.

முன்னதாக,  2014 ஆம் ஆண்டில் 8.4 கிலோ எடையுடைய வெங்காயமே  உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனையைக் கொண்டிருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  உலக சாதனை படைத்த வெங்காயத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.



கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வெங்காயம்.samugammedia இங்கிலாந்து நாட்டில் Harrogate நகரில் நடத்தப்பட்ட கண்காட்சியில் 8.97 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெங்காயம் உலக சாதனை படைத்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இங்கிலாந்தில் இலையுதிர்கால மலர் கண்காட்சி ஒன்று ஹரோ கேட் நகரில் நடத்தப்பட்டுள்ளது. அதில், வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த விவசாயி கரேத் கிரிஃபின் (Gareth Griffin) என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த  8.97 கிலோ கிராம் எடையைக் கொண்ட வெங்காயத்தை காட்சிப்படுத்தினார்.இந்நிலையில் குறித்த வெங்காயம் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனையை படைத்துள்ளது. முன்னதாக,  2014 ஆம் ஆண்டில் 8.4 கிலோ எடையுடைய வெங்காயமே  உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனையைக் கொண்டிருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலக சாதனை படைத்த வெங்காயத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement