• Feb 14 2025

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான உத்தரவு; சட்டமா அதிபர் நடவடிக்கை..!

Sharmi / Feb 13th 2025, 2:12 pm
image

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாகவும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருந்தார்.

ஜனவரி 27 ஆம் திதி, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, இந்த வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படாது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநருக்குத் தெரிவித்தார்.

கடிதத்தின்படி, முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவு OIC SI திஸ்ஸசிறி சுகதபால மற்றும் முன்னாள் DIG பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம்.

சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாகக் கூறியது.

விரைவில்,  லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய  அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான உத்தரவு; சட்டமா அதிபர் நடவடிக்கை. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாகவும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருந்தார்.ஜனவரி 27 ஆம் திகதி, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, இந்த வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படாது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநருக்குத் தெரிவித்தார்.கடிதத்தின்படி, முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவு OIC SI திஸ்ஸசிறி சுகதபால மற்றும் முன்னாள் DIG பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம்.சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாகக் கூறியது.விரைவில்,  லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய  அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement