• May 18 2024

நெடுந்தீவில் மீட்கப்பட்ட சடலத்தை அடக்கம் செய்யுமாறு பணிப்பு...!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 12:59 pm
image

Advertisement

நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 21) சடலமாக மீட்கப்பட்டார்.

நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டதை அடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனையின் பின் சட்ட வைத்திய அதிகாரியின் பணிப்பின்படி உடலம் பொதி செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று மாலை(ஏப்ரல் 22) 4.00 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைகளின் போது உடலை மீள பெறும் வகையில் அடக்கம் செய்யுமாறும் பணிக்கப்பட்டது.

சடலம் நேற்று மாலையே விசேட படகில் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் இன்று(23)  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

நெடுந்தீவில் மீட்கப்பட்ட சடலத்தை அடக்கம் செய்யுமாறு பணிப்பு.samugammedia நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 21) சடலமாக மீட்கப்பட்டார்.நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டதை அடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனையின் பின் சட்ட வைத்திய அதிகாரியின் பணிப்பின்படி உடலம் பொதி செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று மாலை(ஏப்ரல் 22) 4.00 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.விசாரணைகளின் போது உடலை மீள பெறும் வகையில் அடக்கம் செய்யுமாறும் பணிக்கப்பட்டது.சடலம் நேற்று மாலையே விசேட படகில் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் இன்று(23)  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

Advertisement

Advertisement

Advertisement