அரிசி தட்டுப்பாட்டால் இன்று சாதாரண மக்கள் பாதிக்ப்படுவதாக இன்றைய பாராளுமன்ற அமர்விலே சிறிநேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்தாவது எமது நாட்டைப் பொறுத்த வரையில் கிழக்குப்பகுதி நெற்களஞ்சியம் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் அரிசி தட்டுப்பாட்டால் அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது. நெல் விளையும் எமது தேசத்தில் அரசியை இறக்குமதி செய்வது வெட்கப்பட வேண்டிய விடயம்
தனிப்பட்ட முறையில் அரிசியினை பதுக்கி வைப்பதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பிரதான உணவான அரிசியை நாங்கள் சேகரிக்காமல் கண்டபடி அதனை விநியோகம் செய்கின்றோம். இதனால் ஏழைகள் பாதிக்கப்படுபின்றார்கள்.
ஆகவே அரசாங்கம் உத்தரவாத விலையில் அரிசியை விற்பனை செய்வது தொடர்பாகவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கையிருப்பை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அரிசி வாங்க முடியாமல் ஏழை மக்கள் திண்டாடுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்
அரிசியினை பதுக்கி வைப்பதால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் அரிசி தட்டுப்பாட்டால் இன்று சாதாரண மக்கள் பாதிக்ப்படுவதாக இன்றைய பாராளுமன்ற அமர்விலே சிறிநேசன் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்தாவது எமது நாட்டைப் பொறுத்த வரையில் கிழக்குப்பகுதி நெற்களஞ்சியம் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் அரிசி தட்டுப்பாட்டால் அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது. நெல் விளையும் எமது தேசத்தில் அரசியை இறக்குமதி செய்வது வெட்கப்பட வேண்டிய விடயம்தனிப்பட்ட முறையில் அரிசியினை பதுக்கி வைப்பதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பிரதான உணவான அரிசியை நாங்கள் சேகரிக்காமல் கண்டபடி அதனை விநியோகம் செய்கின்றோம். இதனால் ஏழைகள் பாதிக்கப்படுபின்றார்கள். ஆகவே அரசாங்கம் உத்தரவாத விலையில் அரிசியை விற்பனை செய்வது தொடர்பாகவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கையிருப்பை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அரிசி வாங்க முடியாமல் ஏழை மக்கள் திண்டாடுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்