• May 18 2024

தனிநபர் ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடி காட்டிய பச்சிலைப்பள்ளி பிரதேச சபை..! samugammedia

Chithra / Jun 23rd 2023, 9:02 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் தனி நபர் ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அலுவலக உதவியாளர் காணியில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை பொலிசாரின் உதவியோடு பிடுங்கி வீசியுள்ளனர்.

பளை பிரதேசத்தில் தம்பகாமம் பகுதியில் அதே பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர் தனது உறுதிக்காணி எல்லையில் வேலிகள் அமைத்துகொண்டிருந்த வேளை திடீரென எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் வந்த பளை பொலிசார் மற்றும் பிரதேச சபை அலுவலக ஊழியர் உட்பட காணி உரிமையாளர் கண்முன்னே அமைக்கப்பட்ட வேலிகளை பிடுங்கி வீசியுள்ளனர்.

காணி உரிமையாளரால் ஏன் அகற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போதும் அவரது கேள்விகளுக்கும் எந்த பதிலும் யாரும் கூறாமல் வேலிகளை அகற்றியுள்ளனர்.பின் காணி உரிமையாளர் மனித உரிமைகள் ஆனணக்குழு மற்றும் உள்ளூராட்சி தலைவர் உட்பட பலருக்கும் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாகவே பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இப்படியான அநீதிகள் இடம்பெற்று வருவதாகவும் சபையின் செயலாளர் சாதி அடிப்படையில் ஒரு சில மக்கள் மீது இவ்வாறான அடாவடி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் முன்னாள் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனால்  வழங்கப்பட்ட கடைகள் மற்றும் அதற்கான அனுமதிகளை தனிப்பட்ட விரோதம் காரணமாக அடாவடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதே போன்று கடந்த ஆண்டும் முல்லையடி கிராமத்தில் உள்வீதிகளால் சட்டவிரோத பொருட்கள் வேகமாக கொண்டு செல்வதால் சிறுவர்கள் அதிகம் வசிக்கும் கிராம்ம் என்பதால் வீதி தடை போட்டுத்தருமாறு தவிசாளருக்கு கோரிக்கை விடப்பட்டது இதனையடுத்து அந்த கிராமத்தில் வீதிதடையும் போடப்பட்டது.

பின் சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய சபையின் செயலாளரால் அதே அலுவலக உதவியாளரை அலுவலக வாகனம் இல்லாது தனி வாகனத்தில் அனுப்பி போடப்பட்ட வீதி தடை கிளறி எறியப்பட்டது.

இவ்வாறு பல சம்பவங்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச  சபை செயலாளரால் இடம்பெற்று கொண்டிருக்கிறது 

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் விரைந்து கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.



தனிநபர் ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடி காட்டிய பச்சிலைப்பள்ளி பிரதேச சபை. samugammedia கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் தனி நபர் ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அலுவலக உதவியாளர் காணியில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை பொலிசாரின் உதவியோடு பிடுங்கி வீசியுள்ளனர்.பளை பிரதேசத்தில் தம்பகாமம் பகுதியில் அதே பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர் தனது உறுதிக்காணி எல்லையில் வேலிகள் அமைத்துகொண்டிருந்த வேளை திடீரென எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் வந்த பளை பொலிசார் மற்றும் பிரதேச சபை அலுவலக ஊழியர் உட்பட காணி உரிமையாளர் கண்முன்னே அமைக்கப்பட்ட வேலிகளை பிடுங்கி வீசியுள்ளனர்.காணி உரிமையாளரால் ஏன் அகற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போதும் அவரது கேள்விகளுக்கும் எந்த பதிலும் யாரும் கூறாமல் வேலிகளை அகற்றியுள்ளனர்.பின் காணி உரிமையாளர் மனித உரிமைகள் ஆனணக்குழு மற்றும் உள்ளூராட்சி தலைவர் உட்பட பலருக்கும் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளனர்.சமீபகாலமாகவே பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இப்படியான அநீதிகள் இடம்பெற்று வருவதாகவும் சபையின் செயலாளர் சாதி அடிப்படையில் ஒரு சில மக்கள் மீது இவ்வாறான அடாவடி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் முன்னாள் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனால்  வழங்கப்பட்ட கடைகள் மற்றும் அதற்கான அனுமதிகளை தனிப்பட்ட விரோதம் காரணமாக அடாவடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.இதே போன்று கடந்த ஆண்டும் முல்லையடி கிராமத்தில் உள்வீதிகளால் சட்டவிரோத பொருட்கள் வேகமாக கொண்டு செல்வதால் சிறுவர்கள் அதிகம் வசிக்கும் கிராம்ம் என்பதால் வீதி தடை போட்டுத்தருமாறு தவிசாளருக்கு கோரிக்கை விடப்பட்டது இதனையடுத்து அந்த கிராமத்தில் வீதிதடையும் போடப்பட்டது.பின் சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய சபையின் செயலாளரால் அதே அலுவலக உதவியாளரை அலுவலக வாகனம் இல்லாது தனி வாகனத்தில் அனுப்பி போடப்பட்ட வீதி தடை கிளறி எறியப்பட்டது.இவ்வாறு பல சம்பவங்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச  சபை செயலாளரால் இடம்பெற்று கொண்டிருக்கிறது இது தொடர்பாக உரிய அதிகாரிகள் விரைந்து கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement