• May 18 2024

சுவிஸ் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நாடாளுமன்றம் அனுமதி மறுப்பு! samugammedia

Tamil nila / Jun 3rd 2023, 4:41 pm
image

Advertisement

ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன், தொடர்ந்து பல நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறது. சில நாடுகள் சில குறிப்பிட்ட ஆயுதங்களை வழங்கி வருகின்றன, மேலும் சில உதவிகள் வழங்குவதாக சில நாடுகள் உறுதியும் அளித்துள்ளன.

மேலும் சுவிட்சர்லாந்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வாங்கியுள்ள சில நாடுகள், அவற்றை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய விரும்புகின்றன.

ஆனால், சுவிட்சர்லாந்தின் அனுமதியின்றி அந்த நாடுகளால் சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை மறு ஏற்றுமதி செய்ய முடியாது.

இந்நிலையில், சுவிஸ் தயாரிப்புகளை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பில் நேற்று முன்தினம் சுவிஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், சுவிஸ் தயாரிப்புகளை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவதற்கு எதிராக 98 பேரும், ஆதரவாக 75 பேரும் வாக்களித்தனர். இரண்டு பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இருப்பினும் ஆக, உக்ரைனுக்கு சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான விதிகளை இப்போதைக்கு சுவிட்சர்லாந்து நெகிழ்த்துவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். 


சுவிஸ் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நாடாளுமன்றம் அனுமதி மறுப்பு samugammedia ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன், தொடர்ந்து பல நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறது. சில நாடுகள் சில குறிப்பிட்ட ஆயுதங்களை வழங்கி வருகின்றன, மேலும் சில உதவிகள் வழங்குவதாக சில நாடுகள் உறுதியும் அளித்துள்ளன.மேலும் சுவிட்சர்லாந்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வாங்கியுள்ள சில நாடுகள், அவற்றை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய விரும்புகின்றன.ஆனால், சுவிட்சர்லாந்தின் அனுமதியின்றி அந்த நாடுகளால் சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை மறு ஏற்றுமதி செய்ய முடியாது.இந்நிலையில், சுவிஸ் தயாரிப்புகளை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பில் நேற்று முன்தினம் சுவிஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.வாக்கெடுப்பில், சுவிஸ் தயாரிப்புகளை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவதற்கு எதிராக 98 பேரும், ஆதரவாக 75 பேரும் வாக்களித்தனர். இரண்டு பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.இருப்பினும் ஆக, உக்ரைனுக்கு சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான விதிகளை இப்போதைக்கு சுவிட்சர்லாந்து நெகிழ்த்துவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement