• Nov 24 2024

பாராளுமன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்..!

Sharmi / Oct 30th 2024, 9:37 am
image

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் காலை (30) ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில்,

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3947 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அந்தவகையில்,இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்திலும் சுமூகமாக இடம்பெற்றுவருகிறது.

குறிப்பாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் ,தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்றையதினம் தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் இன்று காலை 8.30 மணிமுதல் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் குறித்த தரப்பினர் தமது வாக்கினை செலுத்தி வருகின்றனர். 

இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 14,060 பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். 

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5942 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4171 பேரும், முல்லைத்தீவில் 3497,பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்களும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் இன்று காலை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில், மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்று(30) காலை 7.30 மணிக்கு மூல தபால் வாக்களிப்பு இடம்பெற்றது.

மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் கண்காணிப்பின் கீழ் இவ் வாக்களிப்பு இடம்பெற்றதோடு மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.



இதேவேளை, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (30) திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.

பாராளுமன்ற தேர்தலுக்கான  அஞ்சல் மூல வாக்களிப்பானது இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் (1) மற்றும் (04)ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




கிளிநொச்சி

கிளிநொச்சியிலும் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றனர். 

பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக இன்றையதினம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகள் கிளிநொச்சி மாவட்ட செயலகம்,  பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

அத்துடன்,  கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க 3656 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 96 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










பாராளுமன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம். பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் காலை (30) ஆரம்பமாகியுள்ளது.அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டம்முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்.வன்னித் தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3947 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.அந்தவகையில்,இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வவுனியா மாவட்டம்எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்திலும் சுமூகமாக இடம்பெற்றுவருகிறது.குறிப்பாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் ,தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்றையதினம் தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று காலை 8.30 மணிமுதல் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் குறித்த தரப்பினர் தமது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 14,060 பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5942 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4171 பேரும், முல்லைத்தீவில் 3497,பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்களும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டம்திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் இன்று காலை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.அந்தவகையில், மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்று(30) காலை 7.30 மணிக்கு மூல தபால் வாக்களிப்பு இடம்பெற்றது.மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் கண்காணிப்பின் கீழ் இவ் வாக்களிப்பு இடம்பெற்றதோடு மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (30) திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.பாராளுமன்ற தேர்தலுக்கான  அஞ்சல் மூல வாக்களிப்பானது இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் (1) மற்றும் (04)ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சிகிளிநொச்சியிலும் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றனர். பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக இன்றையதினம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகள் கிளிநொச்சி மாவட்ட செயலகம்,  பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.அத்துடன்,  கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க 3656 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 96 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement