• Dec 18 2025

இலங்கையின் அபாய பகுதிகளிலிருந்து வெளியேறாத மக்கள்! ஆபத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள்

Chithra / Dec 15th 2025, 10:33 am
image

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் மண்திட்டுங்கள் சரிந்து விழும் அபாயமுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து பல பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், பெரும்பாலானோர் அங்கிருந்து இன்னும் வெளியேறவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

15 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், ஐயாயிரம் பேர் வரையிலேயே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

ஆபத்தில் இருக்கும் மற்றும் ஆய்வு செய்யப்படாத மலைப்பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபாய பகுதிகளிலிருந்து வெளியேறாத மக்கள் ஆபத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.மலைப்பாங்கான பகுதியில் மண்திட்டுங்கள் சரிந்து விழும் அபாயமுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.இது குறித்து பல பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், பெரும்பாலானோர் அங்கிருந்து இன்னும் வெளியேறவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.15 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், ஐயாயிரம் பேர் வரையிலேயே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.ஆபத்தில் இருக்கும் மற்றும் ஆய்வு செய்யப்படாத மலைப்பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement