துன்புறுத்தப்படும் இந்துக்கள் – பிரதமருக்கு அவசர கடிதம்..!

187

பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இந்து அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள கரக் மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயிலை நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி சூறையாடியுள்ளனர்.

அத்தோடு கோயிலை சூறையாடியது மட்டுமல்லாமல் தீயிட்டுக் கொளுத்தியுள்ளமை – சிறுபான்மை சமூக மக்களான இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயலவரின் வீட்டில் கேட்ட பாரிய சத்தம்-பொலிசார் விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்..!

இச்சம்பவத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 26 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தல் விவகாரம்-நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

அத்தோடு இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்துக்கள் பரவலாக துன்புறுத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கக்கோரி பல இங்கிலாந்து இந்து அமைப்புகள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

மட்டக்களப்பு எல்லையில் கடத்தப்பட்ட தமிழர்களிற்கு நடந்த சித்திரவதை! பின்னனியில் யார்? அவர்களே வெளியிட்ட தகவல்..!

மேலும் குறித்த கடிதத்தில் சமீப காலங்களில் பாகிஸ்தானில் இந்துக்கள் போன்ற சிறுபான்மையினரின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது.இங்கிலாந்து பிரதமர் இதற்கு அரச விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.மேலும் ஐக்கிய நாடுகள் சபை வழியாக, இதேபோன்ற விசாரணையை நடத்த கேட்டுக்கொள்ளுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: