இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அந்தவகையில்,இந்தியாவில் பிரசித்திப் பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டைகள் விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.
விநாயகருக்கு படைக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டை 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்பட்டமை அதன் சிறப்பம்சமாகும்.
இந்நிலையில் இதனை பார்வையிடவும் விநாயகரிடம் அருள் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல். இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் இலங்கை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.அந்தவகையில்,இந்தியாவில் பிரசித்திப் பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டைகள் விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.விநாயகருக்கு படைக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டை 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்பட்டமை அதன் சிறப்பம்சமாகும்.இந்நிலையில் இதனை பார்வையிடவும் விநாயகரிடம் அருள் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.