• May 18 2024

பறிபோகும் நெதன்யாகுவின் பிரதமர் பதவி - இஸ்ரேலில் வெடித்த அரசியல் குழப்பம்..! samugammedia

Tamil nila / Nov 16th 2023, 2:51 pm
image

Advertisement

காசா போருக்கு பிறகு இஸ்ரேலின் பிரதமராக தொடர்ந்து நெதன்யாகு  இருக்க மாட்டார் என்று ஜோர்தானின் பிரபல பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேலில் உள்நாட்டு குழப்பங்கள் வெடித்துள்ளன. போர் முடியும் வரை நெதன்யாகு பிரதமர் பதவியில் தொடர்வார் என்று குறிப்பிடட நிலையில் தற்போது நெதன்யாகுவை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என பிரதான எதிர் கட்சி தலைவர் யாயிர் லாபிச் வலியுறுத்தியுள்ளார்.

அந்த நாட்டின் சேனல் 12 க்கு பேட்டி அளித்துள்ள யாயிர் லாபிச், "ஆளும் லிகுய்ட்  கட்சி சார்பில் புதிய பிரதமரை தெரிவுசெய்ய வேண்டும். அவருக்கு எங்கள் கட்சி முழு ஆதரவை தெரிவிக்கும் . யார் புதிய பிரதமர் என்பதை அக் கட்சியே முடிவு செய்யட்டும். அதில் நங்கள் தலையிட விரும்பவில்லை. தற்போதைக்கு தேர்தல் தேவையில்லை. அக்டோபர் 7 தாக்குதலின் பிறகு நெதன்யாகு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். அப்பிடிபட்ட நபரின் தலைமையில் இந்த போரை நங்கள் சந்திக்க விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆளும் நெதன்யாகுவின் லிகுய்ட் கட்சி எதிர் கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கை சோகத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த போரை தலைமை ஏற்று நடத்தி வரும் பிரதமரை பதவியில் இருந்து அகற்றவேண்டும் என்று சொல்வதன் மூலம் யாயிர் லபீச் போர் காலத்தில் அரசியல் செய்துள்ளார் " என்று குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறு நாட்டுக்குள் நடக்கும் இந்த குளறுபடி சண்டை காசாவில் உயிரை கையில் பிடித்து கொண்டு போர் செய்யும் இஸ்ரேல் வீரரர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பறிபோகும் நெதன்யாகுவின் பிரதமர் பதவி - இஸ்ரேலில் வெடித்த அரசியல் குழப்பம். samugammedia காசா போருக்கு பிறகு இஸ்ரேலின் பிரதமராக தொடர்ந்து நெதன்யாகு  இருக்க மாட்டார் என்று ஜோர்தானின் பிரபல பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேலில் உள்நாட்டு குழப்பங்கள் வெடித்துள்ளன. போர் முடியும் வரை நெதன்யாகு பிரதமர் பதவியில் தொடர்வார் என்று குறிப்பிடட நிலையில் தற்போது நெதன்யாகுவை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என பிரதான எதிர் கட்சி தலைவர் யாயிர் லாபிச் வலியுறுத்தியுள்ளார்.அந்த நாட்டின் சேனல் 12 க்கு பேட்டி அளித்துள்ள யாயிர் லாபிச், "ஆளும் லிகுய்ட்  கட்சி சார்பில் புதிய பிரதமரை தெரிவுசெய்ய வேண்டும். அவருக்கு எங்கள் கட்சி முழு ஆதரவை தெரிவிக்கும் . யார் புதிய பிரதமர் என்பதை அக் கட்சியே முடிவு செய்யட்டும். அதில் நங்கள் தலையிட விரும்பவில்லை. தற்போதைக்கு தேர்தல் தேவையில்லை. அக்டோபர் 7 தாக்குதலின் பிறகு நெதன்யாகு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். அப்பிடிபட்ட நபரின் தலைமையில் இந்த போரை நங்கள் சந்திக்க விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள ஆளும் நெதன்யாகுவின் லிகுய்ட் கட்சி எதிர் கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கை சோகத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த போரை தலைமை ஏற்று நடத்தி வரும் பிரதமரை பதவியில் இருந்து அகற்றவேண்டும் என்று சொல்வதன் மூலம் யாயிர் லபீச் போர் காலத்தில் அரசியல் செய்துள்ளார் " என்று குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறு நாட்டுக்குள் நடக்கும் இந்த குளறுபடி சண்டை காசாவில் உயிரை கையில் பிடித்து கொண்டு போர் செய்யும் இஸ்ரேல் வீரரர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement