• May 18 2024

உக்ரைன் ஜனாதிபதி – அமெ‌ரி‌க்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் சந்திப்பு!

Chithra / Dec 22nd 2022, 9:10 am
image

Advertisement

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (22) வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்றையதினம்(22) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், இராணுவ தளபாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது. கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஜனாதிபதி – அமெ‌ரி‌க்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் சந்திப்பு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (22) வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்றையதினம்(22) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், இராணுவ தளபாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது. கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement