ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்மாகாண மக்களுக்கு ஆதரவான சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தது போல தமிழ் மக்களுக்கு சார்பான சட்டத்தையும் கொண்டு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பொழுது இந்த மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் அவரிடம் இல்லை என்கிறார். ஜனாதிபதியிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்று சொன்னால் மக்கள் சபை முறைமையை எல்லா நியாயம் செய்வதற்காக என்று சொல்லி வந்த ஒரு குழப்பமான நிலை தற்பொழுது நிலவிக்கொண்டிருக்கிறது இதனை நிவர்த்தி செய்வதற்கு ஒரு தனி நபர் சட்டம் மூலம் ஒன்றை சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தற்போது ஒரு வருடத்துக்கும் மேலாக இருக்கின்றது. இந்த தனியார் ஊழியர்கள் சட்டத்தை அரசாங்கம் தன்னுடைய சட்டமாக இதனை முன்னெடுக்குமாக இருந்தால் இலங்கையிலே வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கிறார் என்ற செய்தியை அவர் சொல்லலாம்.
ஏனைய வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை எதிர்காலத்தில் தங்கள் ஜனாதிபதியாக வந்தால் தாங்கள் என்ன என்ன விடயங்கள் செய்வோம் என்று வாக்குறுதியை மட்டும் தான் வழங்க முடியும். ஆனால் தற்பொழுது நாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் ஜனாதிபதியின் செய்லினூடாக சில விடயங்களை அறிவிக்கலாம். அதே போல தான் மாகாண சபையிலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக பிரதமரினுடைய தலைமையிலே ஒரு குழு நியமிக்கப்பட்டது.
அதே போல தென்மாகாணத்தில் இருக்கும் முன்னாள் மாகாணசபையின் முதலமைச்சர்கள் தயாரித்த அறிக்கை இருக்கின்றது. இதை அனைத்தையும் நான் நினைக்கின்றேன் ஜனாதிபதி 75, 100க்கு அதிகமான விடயங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அதனை அமுலுக்கு கொண்டு வந்திருக்கின்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு மிக விரைவாக ஜனாதிபதி கொண்டுவந்தால் தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அவர் அதிகாரத்தில் இருக்கின்ற பொழுதும் அவர் தயாராக இருக்கின்றார் என்ற செய்தியை சொல்லலாம்.
மேலும் தான் தற்பொழுது விவசாயிகள் நெல் அறுபடை செய்யும் காலப்பகுதி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயி ஒருவருக்கு ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 135 ரூபாய் தேவைப்படுகிறது.
இன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வரும் போது நேரடியாக விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபை இதனை கொள்வனவு செய்யவேண்டும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இன்று வரை அதற்கான நடவடிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த முறையும் மட்டக்களப்பில் இருக்கும் விவசாயிகள் ஒரு அனாதைகளாக கடனாளிகளாக மாறும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த வகையிலே ஜனாதிபதியின் கவனம் இந்த விடயத்திலும் காண வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமிழர்களுக்கு சாதகமான சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் - சாணக்கியன் வேண்டுகோள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்மாகாண மக்களுக்கு ஆதரவான சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தது போல தமிழ் மக்களுக்கு சார்பான சட்டத்தையும் கொண்டு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பொழுது இந்த மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் அவரிடம் இல்லை என்கிறார். ஜனாதிபதியிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்று சொன்னால் மக்கள் சபை முறைமையை எல்லா நியாயம் செய்வதற்காக என்று சொல்லி வந்த ஒரு குழப்பமான நிலை தற்பொழுது நிலவிக்கொண்டிருக்கிறது இதனை நிவர்த்தி செய்வதற்கு ஒரு தனி நபர் சட்டம் மூலம் ஒன்றை சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தற்போது ஒரு வருடத்துக்கும் மேலாக இருக்கின்றது. இந்த தனியார் ஊழியர்கள் சட்டத்தை அரசாங்கம் தன்னுடைய சட்டமாக இதனை முன்னெடுக்குமாக இருந்தால் இலங்கையிலே வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கிறார் என்ற செய்தியை அவர் சொல்லலாம். ஏனைய வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை எதிர்காலத்தில் தங்கள் ஜனாதிபதியாக வந்தால் தாங்கள் என்ன என்ன விடயங்கள் செய்வோம் என்று வாக்குறுதியை மட்டும் தான் வழங்க முடியும். ஆனால் தற்பொழுது நாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் ஜனாதிபதியின் செய்லினூடாக சில விடயங்களை அறிவிக்கலாம். அதே போல தான் மாகாண சபையிலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக பிரதமரினுடைய தலைமையிலே ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதே போல தென்மாகாணத்தில் இருக்கும் முன்னாள் மாகாணசபையின் முதலமைச்சர்கள் தயாரித்த அறிக்கை இருக்கின்றது. இதை அனைத்தையும் நான் நினைக்கின்றேன் ஜனாதிபதி 75, 100க்கு அதிகமான விடயங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அதனை அமுலுக்கு கொண்டு வந்திருக்கின்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு மிக விரைவாக ஜனாதிபதி கொண்டுவந்தால் தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அவர் அதிகாரத்தில் இருக்கின்ற பொழுதும் அவர் தயாராக இருக்கின்றார் என்ற செய்தியை சொல்லலாம். மேலும் தான் தற்பொழுது விவசாயிகள் நெல் அறுபடை செய்யும் காலப்பகுதி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயி ஒருவருக்கு ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 135 ரூபாய் தேவைப்படுகிறது. இன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வரும் போது நேரடியாக விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபை இதனை கொள்வனவு செய்யவேண்டும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். இன்று வரை அதற்கான நடவடிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த முறையும் மட்டக்களப்பில் இருக்கும் விவசாயிகள் ஒரு அனாதைகளாக கடனாளிகளாக மாறும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த வகையிலே ஜனாதிபதியின் கவனம் இந்த விடயத்திலும் காண வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.