வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள சர்வதேச மேம்பாட்டுக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் முகவர் நிலையத்தின் (USAID) தலைமையகத்தினை செவ்வாய்க்கிழமை (04) இரண்டாவது நாளாகவும் பூட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
இதனிடையே, பணிநீக்கம் செய்யப்பட்ட முகவர் நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் திங்கட்கிழமை (03) பிற்பகல் USAID தலைமையகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ட்ரம்ப், மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர் பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை முடக்க உத்தரவிட்டுள்ளார்.
USAID உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான டொலர்கள் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.
திங்கட்கிழமை USAID தலைமையகத்தின் கதவடைப்பு, உலகெங்கிலும் பில்லியன் கணக்கான டொலர்கள் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கும் முகவர் நிலையத்தின் குழப்பத்தை அதிகரித்தது.
பில்லியனர் எலோன் மஸ்க்கின் நடவடிக்கை மூலம் USAID மூடப்படுவதற்கு இலக்காகியுள்ளது.
அவர் கூட்டாட்சி அரசாங்கத்தை குறைப்பதற்காக ஜனாதிபதியால் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத ஒருசிரேஷ்ட வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்ப் USAIDஐ வெளியுறவுத்துறையுடன் இணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், “இந்த முகவர் நிலையத்தின் செயல்திறனை மேற்பார்வையிட எலோன் மஸ்க்கை அவர் நம்பியிருப்பதாகவும் கூறினார்.
USAID ஆனது வெளியுறவுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டால், அது உலகின் மிகப்பெரிய ஒற்றை நன்கொடையாளரான அமெரிக்காவிடமிருந்து உதவி விநியோகத்தில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எலோன் மஸ்க் USAID ஐ அதிகளவில் விமர்சித்து வருகிறார், இது வெள்ளை மாளிகைக்கு பொறுப்பேற்க முடியாத இடதுசாரி நிறுவனம் என்று கூறினார்.
உலகெங்கிலும் பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள உயிர்காக்கும் உதவிகளை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான USAID திட்டங்கள் ஜனவரி 20 அன்று, பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை முடக்க உத்தரவிட்ட பின்னர் முடங்கியது.
2023 நிதியாண்டில் USAID மூலம், உலகளவில் $72 பில்லியன் உதவியை, மோதல் பகுதிகளில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் முதல் சுத்தமான தண்ணீர், எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணிகள் வரை அமெரிக்கா வழங்கியது.
இது 2024 இல் ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளில் 42% பங்களிப்பினை வழங்கியது.
ட்ரம்பின் முடக்கம் உத்தரவுக்குப் பின்னர், அவசர உணவு உதவியைத் தவிர்த்து, உலகளாவிய வேலை நிறுத்த உத்தரவுகளை வெளியுறவுத்துறை வெளியிட்டது.
இந்த நடவடிக்கையால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அப்போதிருந்து, டஜன் கணக்கான USAID தொழில் ஊழியர்கள் விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
USAID மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வொஷிங்டன் டிசியில் போராட்டம் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள சர்வதேச மேம்பாட்டுக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் முகவர் நிலையத்தின் (USAID) தலைமையகத்தினை செவ்வாய்க்கிழமை (04) இரண்டாவது நாளாகவும் பூட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.இதனிடையே, பணிநீக்கம் செய்யப்பட்ட முகவர் நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் திங்கட்கிழமை (03) பிற்பகல் USAID தலைமையகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ட்ரம்ப், மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர் பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை முடக்க உத்தரவிட்டுள்ளார்.USAID உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான டொலர்கள் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.திங்கட்கிழமை USAID தலைமையகத்தின் கதவடைப்பு, உலகெங்கிலும் பில்லியன் கணக்கான டொலர்கள் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கும் முகவர் நிலையத்தின் குழப்பத்தை அதிகரித்தது.பில்லியனர் எலோன் மஸ்க்கின் நடவடிக்கை மூலம் USAID மூடப்படுவதற்கு இலக்காகியுள்ளது.அவர் கூட்டாட்சி அரசாங்கத்தை குறைப்பதற்காக ஜனாதிபதியால் பணியமர்த்தப்பட்டுள்ளார்.பெயர் குறிப்பிடப்படாத ஒருசிரேஷ்ட வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்ப் USAIDஐ வெளியுறவுத்துறையுடன் இணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், “இந்த முகவர் நிலையத்தின் செயல்திறனை மேற்பார்வையிட எலோன் மஸ்க்கை அவர் நம்பியிருப்பதாகவும் கூறினார்.USAID ஆனது வெளியுறவுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டால், அது உலகின் மிகப்பெரிய ஒற்றை நன்கொடையாளரான அமெரிக்காவிடமிருந்து உதவி விநியோகத்தில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.எலோன் மஸ்க் USAID ஐ அதிகளவில் விமர்சித்து வருகிறார், இது வெள்ளை மாளிகைக்கு பொறுப்பேற்க முடியாத இடதுசாரி நிறுவனம் என்று கூறினார்.உலகெங்கிலும் பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள உயிர்காக்கும் உதவிகளை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான USAID திட்டங்கள் ஜனவரி 20 அன்று, பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை முடக்க உத்தரவிட்ட பின்னர் முடங்கியது.2023 நிதியாண்டில் USAID மூலம், உலகளவில் $72 பில்லியன் உதவியை, மோதல் பகுதிகளில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் முதல் சுத்தமான தண்ணீர், எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணிகள் வரை அமெரிக்கா வழங்கியது.இது 2024 இல் ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளில் 42% பங்களிப்பினை வழங்கியது.ட்ரம்பின் முடக்கம் உத்தரவுக்குப் பின்னர், அவசர உணவு உதவியைத் தவிர்த்து, உலகளாவிய வேலை நிறுத்த உத்தரவுகளை வெளியுறவுத்துறை வெளியிட்டது.இந்த நடவடிக்கையால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அப்போதிருந்து, டஜன் கணக்கான USAID தொழில் ஊழியர்கள் விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.