• May 18 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடாத்தாமல் விட்டால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள்- சாணக்கியன் எம்.பி எச்சரிக்கை!SamugamMedia

Sharmi / Mar 3rd 2023, 12:47 pm
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

'ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது ஒன்று தான், உடனடியாக தேர்தலை நடாத்துங்கள். பொய்யான சாக்குப்போக்கு காரணங்களை காட்டி எம்மை ஏமாற்ற நினைக்காதீர்கள்.தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராகவுள்ளது.

யாரோ ஒரு அமைச்சர் கூறுகிறார் IMF எமக்குத் தேவையில்லை, சீன நாட்டில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வரவுள்ளனர். அதில் டொலர்கள் கிடைக்கின்றதாம்.. இதையே கோட்டாபய ராஜபக்ஷவும் இப்படி இருந்தவர் தான்.. நாட்டில் உள்ள அனைவரிடம் ஆலோசனைகளை கேட்டு அவரை சூழ இருந்தவர்கள் கூறியதெல்லாவற்றையும் நம்பி அவற்றை முழுங்கி இறுதியாக விரட்டி அடிக்கப்பட்டமை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஞாபகத்தில் இருக்கட்டும்..' என தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடாத்தாமல் விட்டால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள்- சாணக்கியன் எம்.பி எச்சரிக்கைSamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்'ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது ஒன்று தான், உடனடியாக தேர்தலை நடாத்துங்கள். பொய்யான சாக்குப்போக்கு காரணங்களை காட்டி எம்மை ஏமாற்ற நினைக்காதீர்கள்.தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராகவுள்ளது.யாரோ ஒரு அமைச்சர் கூறுகிறார் IMF எமக்குத் தேவையில்லை, சீன நாட்டில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வரவுள்ளனர். அதில் டொலர்கள் கிடைக்கின்றதாம். இதையே கோட்டாபய ராஜபக்ஷவும் இப்படி இருந்தவர் தான். நாட்டில் உள்ள அனைவரிடம் ஆலோசனைகளை கேட்டு அவரை சூழ இருந்தவர்கள் கூறியதெல்லாவற்றையும் நம்பி அவற்றை முழுங்கி இறுதியாக விரட்டி அடிக்கப்பட்டமை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஞாபகத்தில் இருக்கட்டும்.' என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement