ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக புதின் மற்றும் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கு 300க்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். இதனையடுத்து, ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று இரவு முதல் மட்டும், 367 ட்ரோன்களை ஏவி, ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகாலப் போரில் ஒரே நாளில் அதிக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவே முதல்முறையாகும். மேலும், 69 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது TruthSocial தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு உண்டு. ஆனால் அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்! அவர் தேவையில்லாமல் நிறைய பேரைக் கொல்கிறார்.
நான் வீரர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. எந்த காரணமும் இல்லாமல், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உக்ரைனில் உள்ள நகரங்களில் தாக்குதல் நடத்துகின்றன. அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் அல்ல, முழு உக்ரைனையும் விரும்புகிறார் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், ஒருவேளை அது சரியாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்!
அதேபோல், ஜெலென்ஸ்கி பேசத்தொடங்கினாலே அது சிக்கலில் முடிகிறது. அவர் பேசாமல் இருப்பது நல்லது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி பேசுவதன் மூலம் தனது நாட்டிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவரது வாயிலிருந்து வரும் அனைத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, எனக்கு அது பிடிக்கவில்லை, அதை நிறுத்துவது நல்லது.
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் தொடங்கியிருக்காது. இது ஜெலென்ஸ்கி, புடின் மற்றும் பைடனின் போர், "ட்ரம்பின்" போர் அல்ல" என தெரிவித்துள்ளார். முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அமெரிக்கா கண்டிப்பதில்லை என ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.
புடின் பைத்தியம் ஆகி விட்டார், ஜெலன்ஸ்கி பேசினாலே பிரச்சனை - கோபமடைந்த டிரம்ப் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக புதின் மற்றும் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கு 300க்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். இதனையடுத்து, ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.நேற்று இரவு முதல் மட்டும், 367 ட்ரோன்களை ஏவி, ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகாலப் போரில் ஒரே நாளில் அதிக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவே முதல்முறையாகும். மேலும், 69 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது TruthSocial தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு உண்டு. ஆனால் அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் அவர் தேவையில்லாமல் நிறைய பேரைக் கொல்கிறார். நான் வீரர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. எந்த காரணமும் இல்லாமல், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உக்ரைனில் உள்ள நகரங்களில் தாக்குதல் நடத்துகின்றன. அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் அல்ல, முழு உக்ரைனையும் விரும்புகிறார் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், ஒருவேளை அது சரியாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் அதேபோல், ஜெலென்ஸ்கி பேசத்தொடங்கினாலே அது சிக்கலில் முடிகிறது. அவர் பேசாமல் இருப்பது நல்லது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஜெலென்ஸ்கி பேசுவதன் மூலம் தனது நாட்டிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவரது வாயிலிருந்து வரும் அனைத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, எனக்கு அது பிடிக்கவில்லை, அதை நிறுத்துவது நல்லது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் தொடங்கியிருக்காது. இது ஜெலென்ஸ்கி, புடின் மற்றும் பைடனின் போர், "ட்ரம்பின்" போர் அல்ல" என தெரிவித்துள்ளார். முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அமெரிக்கா கண்டிப்பதில்லை என ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.