• Nov 03 2024

இனவாதம் தோற்கடிக்கப்பட்டு இன ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகிறது - அருண் ஹேமச்சந்திரா

Tharmini / Nov 2nd 2024, 9:51 am
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை - தோப்பூரில் நேற்று (01) இரவு இடம்பெற்றது.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், சம்பிரதாய அரசியல் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இன ஒற்றுமை,சமத்துவம் பேணப்பட்டு வருகிறது.தற்போது இனவாதம் தோற்கடிக்கப்பட்டு இன ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகிறது.

இதைத்தான் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இனவாதம் தோற்கடிக்கப்பட்டு இன ஒற்றுமை தற்போது கட்டியெழுப்பப்படுகிறது.

இதுவரை காலம் நாட்டை மோசடியில், ஊழலில், இனவாதத்தில் தள்ளிய அரசியல் 14 ஆம் திகதி தோற்கடிக்கப்படும்.

திருகோணமலை தற்போது அரசியல் ரீதியான மாற்றத்தை கண்டு கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை 14 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும். தற்போது நாட்டில் தேவையற்ற வீண்விரையம் இல்லாமல் ஆக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஹெலிகொப்டரில் திருகோணமலைக்கு வரவில்லை.சாதாரணமாக நாங்கள் செல்லும் பாதையிலே வந்தார்.இதன்போது பாதுகாப்பு செலவுகூட குறைக்கப்பட்டிருந்தது.

இதுவரை காலமும் ஜனாதிபதியின் செலவுகள் அரசாங்கத்தின் செலவிலே இடம்பெற்றது.ஆனால் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் செலவிலே இடம்பெற்றன.ஜனாதிபதி முதற்கொண்டு பிரதமர் வரை இந்த மாற்றத்தை நிகழ்த்தி வருகின்றனர்.இதனை தாங்கிக் கொள்ளாத தீய சக்திகள் ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர்.

இன்று கிடைத்த தகவலின் படி முன்னாள் அமைச்சர் ஒருவர் அவரது வாசஷ்தலத்திலிருந்து 45 வருடங்களாக விளகவில்லை. இவை அனைத்தும் மக்களது பணமாகும், என்றார்.

இனவாதம் தோற்கடிக்கப்பட்டு இன ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகிறது - அருண் ஹேமச்சந்திரா தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை - தோப்பூரில் நேற்று (01) இரவு இடம்பெற்றது.இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், சம்பிரதாய அரசியல் தற்போது மாற்றப்பட்டுள்ளது.இன ஒற்றுமை,சமத்துவம் பேணப்பட்டு வருகிறது.தற்போது இனவாதம் தோற்கடிக்கப்பட்டு இன ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகிறது. இதைத்தான் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இனவாதம் தோற்கடிக்கப்பட்டு இன ஒற்றுமை தற்போது கட்டியெழுப்பப்படுகிறது.இதுவரை காலம் நாட்டை மோசடியில், ஊழலில், இனவாதத்தில் தள்ளிய அரசியல் 14 ஆம் திகதி தோற்கடிக்கப்படும்.திருகோணமலை தற்போது அரசியல் ரீதியான மாற்றத்தை கண்டு கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை 14 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும். தற்போது நாட்டில் தேவையற்ற வீண்விரையம் இல்லாமல் ஆக்கப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஹெலிகொப்டரில் திருகோணமலைக்கு வரவில்லை.சாதாரணமாக நாங்கள் செல்லும் பாதையிலே வந்தார்.இதன்போது பாதுகாப்பு செலவுகூட குறைக்கப்பட்டிருந்தது.இதுவரை காலமும் ஜனாதிபதியின் செலவுகள் அரசாங்கத்தின் செலவிலே இடம்பெற்றது.ஆனால் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் செலவிலே இடம்பெற்றன.ஜனாதிபதி முதற்கொண்டு பிரதமர் வரை இந்த மாற்றத்தை நிகழ்த்தி வருகின்றனர்.இதனை தாங்கிக் கொள்ளாத தீய சக்திகள் ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர்.இன்று கிடைத்த தகவலின் படி முன்னாள் அமைச்சர் ஒருவர் அவரது வாசஷ்தலத்திலிருந்து 45 வருடங்களாக விளகவில்லை. இவை அனைத்தும் மக்களது பணமாகும், என்றார்.

Advertisement

Advertisement

Advertisement