• May 05 2024

பின்கதவால் ஜனாதிபதியான ரணில்...! ஊழல்வாதிகளை பாதுகாத்து ஜனாதிபதி பதவியை தக்கவைக்க முயற்சி...! அருண் ஹேமச் சந்திரா குற்றச்சாட்டு...!

Sharmi / Sep 3rd 2023, 4:07 pm
image

Advertisement

நாடு எந்தளவு பாரதூரமான நிலைக்கு  பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு  பல நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார ,சமூக நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டை சூரையாடியுள்ளார்கள்  இந்த பிரதேசங்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் இன, மத பேத கட்சிகளை உருவாக்கி  அரசியல் தலைமைகள் மக்களை தொடர்ந்தும் பேரம் பேசும் நிலைக்கு சொல்லெண்னா துயரங்களுக்கு தள்ளி விட்டார்கள்  என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (02) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில்  உணர்வு பூர்வமாக கூறிவிட்டு பழைய சாக்கடைக்கே அப்படியே செல்கிறார்கள் . தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவு தற்போது  பெருகியுள்ளது.நெருக்கடி நிலமையின் போதும் மக்கள் எழுச்சியின் மூலம் வலு  சேர்க்கப்பட்டு  ஆட்சியை  விரட்டியடித்து  ராஜபக்ச கும்பல்களும் இதன் போது  விரட்டியடிக்கப்பட்டார்கள் ..ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்கவும்  வீண் விரயம் இனவாதம் போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும். 

புதிய அரசாங்கத்தின் விளைவாக  ரணில் ராஜபக்சவின்  நரித்தனமே  தேர்தல் ஒத்தி வைப்புக்கான காரணமாக காணப்படுகிறது ..75 வருட கால  சாபமும் நாட்டின் ஆட்சி முறையில் தொடர்கின்றது .

ரணில்  விக்ரமசிங்கவின் பதவி ஏற்பின் பின் பொருளாதார கஷ்டம் நீங்கி  செழித்தோங்கும் என பலர் கூறியார்கள் ஆனால் தற்போது  விலை ஏற்றம் வேலை வாய்ப்பு இன்மை போன்ற நிலை ஏற்பட்டு  தற்போது தலை கீழாக மாறியுள்ளது.

பெற்றோல் விலை  கடந்த காலத்தில் ஒரு ரூபாவால் தான் அதிகரித்தது ஆனால் தற்போது 30 ரூபா வரையான பாரிய  விலை அதிகரிப்பினை செய்கிறார்கள் அது போன்று தேசிய சொத்துக்கள்  அரா விலைக்கு  தாரை வார்ப்பு செய்யப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது இனவாதம் விதைக்கப்படுகிறது அத்தனைக்கும் ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும் .இன, மத ஒற்றுமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர வேண்டும் .

தென் இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் வேலைப்பாடுகள் மக்களின் ஒத்தாசை காணப்படுகிறது  அது போன்று வட கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்.
கிண்ணியாவில் தேசி மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான மாநாடானது எதிர்வரும் (14.09.2023) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 4.00மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த மாநாட்டில் தோழர் அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் கலந்து கொள்வர் இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மாநாடாக இந்த   மாநாடு முழு இலங்கைக்கும் எடுத்துக்காட்டாக காணப்படும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை . எமது ஆட்சி மலர்ந்தால் ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்கி   பக்கச்சார்பற்ற விசாரனை இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 13-வது சீர்திருத்தம்  அரசியல் யாப்பில்   சொல்லப்பட்டுள்ளது. இன பிரச்சனை தீர்வு தொடர்பில் பார்ப்போமாக இருந்தால் போதிய அளவு சட்டமா இல்லையா என்பது வேறு விடயம்.

 இந்த சட்டம் போதாது புதிய சட்டமன்ற ஏற்றுக்கொண்டு புதிய விடயங்களுக்கு செல்லப் போகின்றோம் என்பதை ரணில் விக்ரம சிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலே அரசியல் அமைப்பு சபை என்ற ஒரு விடயத்தை கூட்டி அந்த அரசியல் அமைப்பு சபையானது புதிய அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை  உருவாக்குவதற்காக சுமார் 80க்கும் அதிகமான தடவை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை கூடியிருக்கின்றார்.

பாராளுமன்றில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் அதன் யோசனைகளை அரசியல் அமைப்பு சபைக்கு முன்வைத்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் முன்வைக்கவில்லை மக்கள் ஆணை இல்லாமல் பின்கதவால் ஜனாதிபதியான ரணில் ராஜபக்ச குடும்பங்களையும் ஊழல்வாதிகளையும் பாதுகாக்க ஜனாதிபதி பதவியை தக்கவைக்க முனைகிறார் இதனை ஏற்க முடியாது.
இந்த நாட்டில் உள்ள காணிகளையும் ஏனைய  சொத்துக்களையும் விற்கின்ற நிலையில்  ரணில்  ராஜபக்ச  ஈடுபடுகின்றார் என மேலும் தெரிவித்தார்.

பின்கதவால் ஜனாதிபதியான ரணில். ஊழல்வாதிகளை பாதுகாத்து ஜனாதிபதி பதவியை தக்கவைக்க முயற்சி. அருண் ஹேமச் சந்திரா குற்றச்சாட்டு. நாடு எந்தளவு பாரதூரமான நிலைக்கு  பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு  பல நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார ,சமூக நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டை சூரையாடியுள்ளார்கள்  இந்த பிரதேசங்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் இன, மத பேத கட்சிகளை உருவாக்கி  அரசியல் தலைமைகள் மக்களை தொடர்ந்தும் பேரம் பேசும் நிலைக்கு சொல்லெண்னா துயரங்களுக்கு தள்ளி விட்டார்கள்  என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (02) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில்  உணர்வு பூர்வமாக கூறிவிட்டு பழைய சாக்கடைக்கே அப்படியே செல்கிறார்கள் . தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவு தற்போது  பெருகியுள்ளது.நெருக்கடி நிலமையின் போதும் மக்கள் எழுச்சியின் மூலம் வலு  சேர்க்கப்பட்டு  ஆட்சியை  விரட்டியடித்து  ராஜபக்ச கும்பல்களும் இதன் போது  விரட்டியடிக்கப்பட்டார்கள் .ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்கவும்  வீண் விரயம் இனவாதம் போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும்.  புதிய அரசாங்கத்தின் விளைவாக  ரணில் ராஜபக்சவின்  நரித்தனமே  தேர்தல் ஒத்தி வைப்புக்கான காரணமாக காணப்படுகிறது .75 வருட கால  சாபமும் நாட்டின் ஆட்சி முறையில் தொடர்கின்றது .ரணில்  விக்ரமசிங்கவின் பதவி ஏற்பின் பின் பொருளாதார கஷ்டம் நீங்கி  செழித்தோங்கும் என பலர் கூறியார்கள் ஆனால் தற்போது  விலை ஏற்றம் வேலை வாய்ப்பு இன்மை போன்ற நிலை ஏற்பட்டு  தற்போது தலை கீழாக மாறியுள்ளது. பெற்றோல் விலை  கடந்த காலத்தில் ஒரு ரூபாவால் தான் அதிகரித்தது ஆனால் தற்போது 30 ரூபா வரையான பாரிய  விலை அதிகரிப்பினை செய்கிறார்கள் அது போன்று தேசிய சொத்துக்கள்  அரா விலைக்கு  தாரை வார்ப்பு செய்யப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது இனவாதம் விதைக்கப்படுகிறது அத்தனைக்கும் ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும் .இன, மத ஒற்றுமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர வேண்டும் .தென் இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் வேலைப்பாடுகள் மக்களின் ஒத்தாசை காணப்படுகிறது  அது போன்று வட கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்.கிண்ணியாவில் தேசி மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான மாநாடானது எதிர்வரும் (14.09.2023) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 4.00மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த மாநாட்டில் தோழர் அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் கலந்து கொள்வர் இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மாநாடாக இந்த   மாநாடு முழு இலங்கைக்கும் எடுத்துக்காட்டாக காணப்படும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை . எமது ஆட்சி மலர்ந்தால் ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்கி   பக்கச்சார்பற்ற விசாரனை இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். 13-வது சீர்திருத்தம்  அரசியல் யாப்பில்   சொல்லப்பட்டுள்ளது. இன பிரச்சனை தீர்வு தொடர்பில் பார்ப்போமாக இருந்தால் போதிய அளவு சட்டமா இல்லையா என்பது வேறு விடயம். இந்த சட்டம் போதாது புதிய சட்டமன்ற ஏற்றுக்கொண்டு புதிய விடயங்களுக்கு செல்லப் போகின்றோம் என்பதை ரணில் விக்ரம சிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலே அரசியல் அமைப்பு சபை என்ற ஒரு விடயத்தை கூட்டி அந்த அரசியல் அமைப்பு சபையானது புதிய அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை  உருவாக்குவதற்காக சுமார் 80க்கும் அதிகமான தடவை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை கூடியிருக்கின்றார். பாராளுமன்றில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் அதன் யோசனைகளை அரசியல் அமைப்பு சபைக்கு முன்வைத்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் முன்வைக்கவில்லை மக்கள் ஆணை இல்லாமல் பின்கதவால் ஜனாதிபதியான ரணில் ராஜபக்ச குடும்பங்களையும் ஊழல்வாதிகளையும் பாதுகாக்க ஜனாதிபதி பதவியை தக்கவைக்க முனைகிறார் இதனை ஏற்க முடியாது.இந்த நாட்டில் உள்ள காணிகளையும் ஏனைய  சொத்துக்களையும் விற்கின்ற நிலையில்  ரணில்  ராஜபக்ச  ஈடுபடுகின்றார் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement