• Nov 24 2024

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் - எதிர்கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் அவருக்கே வெற்றி..! - ஹரின் நம்பிக்கை

Chithra / Jan 11th 2024, 4:14 pm
image

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என பலர் தெரிவிக்கின்றனர். அவர் போட்டியிடுவார் என நான் தெரிவிக்கின்றேன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி தற்போது இந்த விடயத்தில் மௌனத்தை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஹரீன்பெர்ணாண்டோ  உத்தியோகபூர்வமாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிராமியமட்டத்தில் கட்சி கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சி பிளவுபட்டுள்ளதால் ரணில்விக்கிரமசிங்கவிற்கான வெற்றிவாய்ப்பு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,

பிரச்சாரம் இல்லாததால் எதிர்கட்சி மாத்திரமே இலங்கையில் உள்ளது என தெரிவிப்பது சுலபம் ஆனால் ஆனால் எதிர்கட்சிஇரண்டாக பிளவுபட்டால் ரணில்விக்கிரமசிங்க வெற்றியை நோக்கி செல்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவும் எதிர்கட்சியின் வாக்குகளை பிளவுபடுத்தும் வாய்ப்புள்ளதால் எங்கள் வேட்பாளா முன்னிலை பெறுவார் எனவும் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் - எதிர்கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் அவருக்கே வெற்றி. - ஹரின் நம்பிக்கை  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என பலர் தெரிவிக்கின்றனர். அவர் போட்டியிடுவார் என நான் தெரிவிக்கின்றேன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.ஐக்கியதேசிய கட்சி தற்போது இந்த விடயத்தில் மௌனத்தை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஹரீன்பெர்ணாண்டோ  உத்தியோகபூர்வமாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிராமியமட்டத்தில் கட்சி கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.எதிர்கட்சி பிளவுபட்டுள்ளதால் ரணில்விக்கிரமசிங்கவிற்கான வெற்றிவாய்ப்பு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,பிரச்சாரம் இல்லாததால் எதிர்கட்சி மாத்திரமே இலங்கையில் உள்ளது என தெரிவிப்பது சுலபம் ஆனால் ஆனால் எதிர்கட்சிஇரண்டாக பிளவுபட்டால் ரணில்விக்கிரமசிங்க வெற்றியை நோக்கி செல்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவும் எதிர்கட்சியின் வாக்குகளை பிளவுபடுத்தும் வாய்ப்புள்ளதால் எங்கள் வேட்பாளா முன்னிலை பெறுவார் எனவும் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement