• Apr 13 2025

கான மழையில், கானா பாலாவுடன் சாரங்கா இசைக்குழுவினர்! - திருமலையில் நாளை!

Thansita / Apr 12th 2025, 8:26 am
image

திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இசை நிகழ்வு நாளை 13 ஆம் திகதி திருகோணமலை பிரதான கடற்கரையில் இடம்பெறவுள்ளது. 

திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு அனுமதி முற்றுமுழுதாக இலவசம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

நேற்று 11 ஆம் திகதி ஆரம்பமான சிறப்பு நிகழ்வு 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அதில் விசேடமாக 13 ஆம் திகதி நாளை இடம்பெறவுள்ள  “கான மழை “ இசை நிகழ்வில் ,  “காசு பணம் துட்டு மணி மணி “ பாடல் பிரபலம் கானா பாலா உட்பட பல பல தென்னிந்திய இசைக் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த இன்னிசை நிகழ்வில் இந்தியாவின் எம் மியூசிக் மாரிக் விஜயின் இசைக் குழுவினரும் சாரங்கா இசைக்குழுவினரும் இணைந்து கொள்கின்றனர்.

குறித்த நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்


கான மழையில், கானா பாலாவுடன் சாரங்கா இசைக்குழுவினர் - திருமலையில் நாளை திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இசை நிகழ்வு நாளை 13 ஆம் திகதி திருகோணமலை பிரதான கடற்கரையில் இடம்பெறவுள்ளது. திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு அனுமதி முற்றுமுழுதாக இலவசம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். நேற்று 11 ஆம் திகதி ஆரம்பமான சிறப்பு நிகழ்வு 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அதில் விசேடமாக 13 ஆம் திகதி நாளை இடம்பெறவுள்ள  “கான மழை “ இசை நிகழ்வில் ,  “காசு பணம் துட்டு மணி மணி “ பாடல் பிரபலம் கானா பாலா உட்பட பல பல தென்னிந்திய இசைக் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்த இன்னிசை நிகழ்வில் இந்தியாவின் எம் மியூசிக் மாரிக் விஜயின் இசைக் குழுவினரும் சாரங்கா இசைக்குழுவினரும் இணைந்து கொள்கின்றனர்.குறித்த நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement