• Sep 17 2024

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளை ரணில் பெறுவார்- ராஜித நம்பிக்கை..!

Sharmi / Aug 19th 2024, 8:28 am
image

Advertisement

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இரவு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற முதலாவது 'இயலும் ஸ்ரீலங்கா' தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த "2022ஆம் ஆண்டில் நாடு வீழ்ந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓடிவிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓடிவிட்டார். நிதி அமைச்சர் தப்பியோடினார். யாரும் இதனைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரை அழைத்துப் பேச்சு நடத்தினார்.

அதன்போது இதில் தலையிட வேண்டாம் என்று சஜித் பிரேமதாஸவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை ஒரு அதிசக்தி வாய்ந்த நபரினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று ஹர்ஷ டி சில்வா கூறினார். 

ரணில் விக்கிரமசிங்க இதனை மீட்டெடுத்தார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் இருவரும் கூறிவிட்டனர்.

எரிபொருள், காஸ் உள்ளிட்ட அனைத்து வரிசைகளிலும் நீங்கள் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு இருக்கும். இதனைச் சரி செய்ய யாரும் முன்வரவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் தனி மனிதராக ஒருவர் இருந்தார். அதுதான் ரணில் விக்கிரமசிங்க. அந்த நபர் பதவியை ஏற்று வெளியே வரும்போது ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின.

மிகவும் சிரமமான பணி, ஆனால் இதனை நான் செய்து முடிப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார். அவ்வாறே செய்து காட்டினார். 

அவர் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். அன்று பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. அது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திறைசேரி காலியாகியிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவிடம் வெற்றுப் பாத்திரமே கையளிக்கப்பட்டது. தற்போது பொருளாதாரம் வளர ஆரம்பித்துள்ளது.

கிரேக்கத்தின் பொருளாதாரம் வீழ்ந்தபோது அங்கு என்ன நடந்தது? அரச ஊழியர்களின் சம்பளம் 20 வீதம் வரை குறைக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் வெட்டப்படவில்லை. இது ஆச்சரியமான விடயம். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் வந்தார். வங்குரோத்து அடைந்த நாடொன்றுக்கு வந்திருக்கின்றேன் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். 

மக்கள் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருந்தது. மக்கள் பொழுதுபோக்கில் ஈடுபட்டனர். இதனைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று ஸ்கொட் மொரிசன் கூறினார்.

உலகம் ரணில் விக்கிரமசிங்கவைப் பாராட்டுகின்றது. உள்நாட்டில் சிலர் திட்டித் தீர்க்கின்றனர். உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் விளையாட வேண்டாம். ஏற்கனவே விளையாடி பட்டபாடு உங்களுக்குத் தெரியும். இரவில் வீழ்ந்த குழியில் பகலில் விழ வேண்டாம். ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு யார் வந்தாலும் நாடு மீண்டும் ஆபத்தில் விழும். எமது நிபந்தனைகளை உடைத்தால் மீண்டும் விழ நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கின்றது. கிரேக்கத்தில் இதுவே நடந்தது. எனவே, உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்.

ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டை ஒப்படையுங்கள்.  2025ஆம் ஆண்டு இந்த நிலைமையை மேலும் மேம்படுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இதுவரை 14 பேர் வந்துள்ளனர். இன்னும் முடியவில்லை. இன்னும் வருகின்றார்கள். 

செப்டெம்பர் 21ஆம் திகதி இரவு தேர்தல் முடிவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி  பெறுவார் எனவும் தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளை ரணில் பெறுவார்- ராஜித நம்பிக்கை. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இரவு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அநுராதபுரத்தில் இடம்பெற்ற முதலாவது 'இயலும் ஸ்ரீலங்கா' தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த "2022ஆம் ஆண்டில் நாடு வீழ்ந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓடிவிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓடிவிட்டார். நிதி அமைச்சர் தப்பியோடினார். யாரும் இதனைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரை அழைத்துப் பேச்சு நடத்தினார்.அதன்போது இதில் தலையிட வேண்டாம் என்று சஜித் பிரேமதாஸவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை ஒரு அதிசக்தி வாய்ந்த நபரினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று ஹர்ஷ டி சில்வா கூறினார். ரணில் விக்கிரமசிங்க இதனை மீட்டெடுத்தார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் இருவரும் கூறிவிட்டனர்.எரிபொருள், காஸ் உள்ளிட்ட அனைத்து வரிசைகளிலும் நீங்கள் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு இருக்கும். இதனைச் சரி செய்ய யாரும் முன்வரவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் தனி மனிதராக ஒருவர் இருந்தார். அதுதான் ரணில் விக்கிரமசிங்க. அந்த நபர் பதவியை ஏற்று வெளியே வரும்போது ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின.மிகவும் சிரமமான பணி, ஆனால் இதனை நான் செய்து முடிப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார். அவ்வாறே செய்து காட்டினார். அவர் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். அன்று பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. அது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திறைசேரி காலியாகியிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவிடம் வெற்றுப் பாத்திரமே கையளிக்கப்பட்டது. தற்போது பொருளாதாரம் வளர ஆரம்பித்துள்ளது.கிரேக்கத்தின் பொருளாதாரம் வீழ்ந்தபோது அங்கு என்ன நடந்தது அரச ஊழியர்களின் சம்பளம் 20 வீதம் வரை குறைக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் வெட்டப்படவில்லை. இது ஆச்சரியமான விடயம். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் வந்தார். வங்குரோத்து அடைந்த நாடொன்றுக்கு வந்திருக்கின்றேன் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். மக்கள் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருந்தது. மக்கள் பொழுதுபோக்கில் ஈடுபட்டனர். இதனைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று ஸ்கொட் மொரிசன் கூறினார்.உலகம் ரணில் விக்கிரமசிங்கவைப் பாராட்டுகின்றது. உள்நாட்டில் சிலர் திட்டித் தீர்க்கின்றனர். உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் விளையாட வேண்டாம். ஏற்கனவே விளையாடி பட்டபாடு உங்களுக்குத் தெரியும். இரவில் வீழ்ந்த குழியில் பகலில் விழ வேண்டாம். ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு யார் வந்தாலும் நாடு மீண்டும் ஆபத்தில் விழும். எமது நிபந்தனைகளை உடைத்தால் மீண்டும் விழ நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கின்றது. கிரேக்கத்தில் இதுவே நடந்தது. எனவே, உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்.ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டை ஒப்படையுங்கள்.  2025ஆம் ஆண்டு இந்த நிலைமையை மேலும் மேம்படுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இதுவரை 14 பேர் வந்துள்ளனர். இன்னும் முடியவில்லை. இன்னும் வருகின்றார்கள். செப்டெம்பர் 21ஆம் திகதி இரவு தேர்தல் முடிவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி  பெறுவார் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement