எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் கூறியுள்ளார்.
மேலும், சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் தமக்கு ஆதரவளிப்பதாகவும் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் தாம் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் என அறிவித்துள்ளார்.
இதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கிய தீர்மானத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தயாசிறி ஜயசேகர இதுவரையில் வகித்து வந்த குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார். தயாசிறி அதிரடி அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் கூறியுள்ளார்.மேலும், சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் தமக்கு ஆதரவளிப்பதாகவும் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் தாம் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் என அறிவித்துள்ளார்.இதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கிய தீர்மானத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தயாசிறி ஜயசேகர இதுவரையில் வகித்து வந்த குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.