ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் நேற்று முன்வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள போராடி வரும் தெற்காசிய தீவு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் இறப்பர் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம் 44 சதவீத வரியை விதித்தது.
அதிகரித்த இந்த கட்டணங்கள் வொஷிங்டனால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை அதிகாரிகள் அவற்றை நீக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனினும், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில், ட்ரம்பின் வரிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தீவு நாட்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த அபாயங்கள் ஏற்பட்டால், அந்த அதிர்ச்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
மேலும் தற்போதுள்ள IMF திட்டத்தின் வரையறைகளுக்குள் குறிப்பிட்ட கொள்கை பதில்களை உருவாக்குவதில் நாட்டிற்கு ஆதரவளிப்போம் – என்றும் அவர் உறுதியளித்தார்.
இலங்கைக்கான பிணை எடுப்புத் திட்டத்தை திருத்தத் தயார் IMF அறிவிப்பு ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் நேற்று முன்வந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள போராடி வரும் தெற்காசிய தீவு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் இறப்பர் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம் 44 சதவீத வரியை விதித்தது.அதிகரித்த இந்த கட்டணங்கள் வொஷிங்டனால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேலும், இலங்கை அதிகாரிகள் அவற்றை நீக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.எனினும், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.இந்த நிலையில், ட்ரம்பின் வரிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தீவு நாட்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த அபாயங்கள் ஏற்பட்டால், அந்த அதிர்ச்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.மேலும் தற்போதுள்ள IMF திட்டத்தின் வரையறைகளுக்குள் குறிப்பிட்ட கொள்கை பதில்களை உருவாக்குவதில் நாட்டிற்கு ஆதரவளிப்போம் – என்றும் அவர் உறுதியளித்தார்.