• May 05 2024

ஐரோப்பா வாழ் இலங்கை போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! samugammedia

Chithra / May 7th 2023, 8:09 am
image

Advertisement

வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 132 போதைப்பொருள் வர்த்தகர்கள் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழ்ந்து வருகின்றனர்.


மோதர பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகர் உள்ளிட்ட 47 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பிரான்ஸில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போதைப் பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போல் குறித்த போதைப் பொருள் வர்த்தர்கள் தொடர்பில் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நாடு கடத்த உள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் பிரான்ஸில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு என்ற போதைப் பொருள் வர்த்தகரை நாட்டுக்கு அழைத்து வர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ஐரோப்பா வாழ் இலங்கை போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. samugammedia வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த 132 போதைப்பொருள் வர்த்தகர்கள் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழ்ந்து வருகின்றனர்.மோதர பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகர் உள்ளிட்ட 47 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பிரான்ஸில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் போதைப் பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்டர்போல் குறித்த போதைப் பொருள் வர்த்தர்கள் தொடர்பில் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நாடு கடத்த உள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது.இதேவேளை அண்மையில் பிரான்ஸில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு என்ற போதைப் பொருள் வர்த்தகரை நாட்டுக்கு அழைத்து வர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement