• Nov 25 2024

திருமலை மாவட்ட வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களின் சிரமங்களைக் குறையுங்கள்...! இம்ரான் எம்.பி கோரிக்கை...!

Sharmi / Mar 27th 2024, 4:28 pm
image

தென்கிழக்குபல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களின் பாடநெறிகளைப் பின்பற்றும் திருகோணமலை மாவட்ட மாணவர்களது சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் உபவேந்தருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு  மாணவர்களை வசதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. 

வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்படும் இவ்வகுப்புகள் அடிக்கடி நடத்தப்படுவதால் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொள்வதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

அதேவேளை, பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு நாள் தங்கி இருந்து வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.  

எனவே, இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு நிகழ்நிலையில் (ஒன்லைன்) வகுப்புகள் நடத்த அல்லது திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கற்கை நிலையத்தை ஒழுங்கு படுத்த  நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


திருமலை மாவட்ட வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களின் சிரமங்களைக் குறையுங்கள். இம்ரான் எம்.பி கோரிக்கை. தென்கிழக்குபல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களின் பாடநெறிகளைப் பின்பற்றும் திருகோணமலை மாவட்ட மாணவர்களது சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் உபவேந்தருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு  மாணவர்களை வசதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்படும் இவ்வகுப்புகள் அடிக்கடி நடத்தப்படுவதால் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொள்வதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.அதேவேளை, பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு நாள் தங்கி இருந்து வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே, இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு நிகழ்நிலையில் (ஒன்லைன்) வகுப்புகள் நடத்த அல்லது திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கற்கை நிலையத்தை ஒழுங்கு படுத்த  நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement