• May 05 2024

அரிசியின் விலையேற்றத்தை குறையுங்கள்..! கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு...!

Sharmi / Apr 9th 2024, 3:22 pm
image

Advertisement

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி கிளிநொச்சியில் இன்று(09) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி இடம்பெறும் இப் போராட்டமானது, இன்றைய தினம்(09)  வடக்கு கிழக்கு எங்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கூலித் தொழிலாளியின் நாளாந்த வருமானம் 1500 ரூபா ரூபாவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரிசியின் விலையை 100 ரூபாயிலும் குறைக்குமாறும் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு கேட்டு நின்றனர்.  

மேலும் பல உயிர்களை காவு வாங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தருமாறும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அரிசியின் விலையேற்றத்தை குறையுங்கள். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி கிளிநொச்சியில் இன்று(09) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் இடம்பெற்றது.இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி இடம்பெறும் இப் போராட்டமானது, இன்றைய தினம்(09)  வடக்கு கிழக்கு எங்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒரு கூலித் தொழிலாளியின் நாளாந்த வருமானம் 1500 ரூபா ரூபாவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரிசியின் விலையை 100 ரூபாயிலும் குறைக்குமாறும் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு கேட்டு நின்றனர்.  மேலும் பல உயிர்களை காவு வாங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தருமாறும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement