• May 18 2024

எதிர்வரும் பட்ஜெட் மூலம் மக்களுக்கு நிவாரணங்கள்...! ஆஷு மாரசிங்க...! samugammedia

Sharmi / Nov 6th 2023, 9:03 pm
image

Advertisement

எதிர்வரும் வரவு செலவு திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி முயற்சித்து வருகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் நேற்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு தெரியும். அதேபோன்று நாட்டை கொண்டு செல்ல வேண்டிய வழியும்  ஜனாதிபதிக்கு தெரியும். இந்த அனைத்து விடயங்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டு முடியுமானளவு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கே ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

அத்துடன் இந்த விடயங்களை செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா என்பது கேள்வி இருக்கிறது. ஆனால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வரி வருமானங்களை சேர்த்துக்கொள்வதை முறையாக மேற்கொள்வது அவசியமாகும்.

நாட்டின் வருமானங்களை ஒன்றுசேர்ப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தில் விசேட குழுவொன்றை அமைத்திருக்கிறது. அதேபோன்று பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு ஊடாக நாட்டின் வருமானங்களை சேர்க்கும் வேலைத்திட்டம் செயற்பட்டு வருகிறது. நிதிக்குழுவிலும் இதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

நாட்டுக்கு வரவேண்டிய வரி வருமானங்கள் மற்றும் ஏனைய வருமானங்களை நாங்கள் முறையாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் வரி அதிகரிக்க தேவை ஏற்படாது. அதேநேரம் இந்த வரி வருமானங்கள் அனைத்தையும்  சேர்க்க முடியுமானால் எமக்கு 3 ரில்லியன் ரூபா வரை வருமானத்தை சேர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.  

என்றாலும் சில அதிகாரிகள் வரி வருமானத்தை சேர்ப்பதற்கு பதிலாக வரிப் பணத்தை அவர்களின் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இவ்வாறான அதிகாரிகள் தொடர்பில்  அறிந்தால் அது தொடர்பாக  தகவல் தெரிவிக்க ஆணைக்குழுவில் முறையிடலாம்  எனவும் தெரிவித்தார்.  

எதிர்வரும் பட்ஜெட் மூலம் மக்களுக்கு நிவாரணங்கள். ஆஷு மாரசிங்க. samugammedia எதிர்வரும் வரவு செலவு திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி முயற்சித்து வருகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.சிறிகொத்தாவில் நேற்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு தெரியும். அதேபோன்று நாட்டை கொண்டு செல்ல வேண்டிய வழியும்  ஜனாதிபதிக்கு தெரியும். இந்த அனைத்து விடயங்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டு முடியுமானளவு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கே ஜனாதிபதி முயற்சிக்கிறார்.அத்துடன் இந்த விடயங்களை செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா என்பது கேள்வி இருக்கிறது. ஆனால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வரி வருமானங்களை சேர்த்துக்கொள்வதை முறையாக மேற்கொள்வது அவசியமாகும்.நாட்டின் வருமானங்களை ஒன்றுசேர்ப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தில் விசேட குழுவொன்றை அமைத்திருக்கிறது. அதேபோன்று பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு ஊடாக நாட்டின் வருமானங்களை சேர்க்கும் வேலைத்திட்டம் செயற்பட்டு வருகிறது. நிதிக்குழுவிலும் இதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.நாட்டுக்கு வரவேண்டிய வரி வருமானங்கள் மற்றும் ஏனைய வருமானங்களை நாங்கள் முறையாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் வரி அதிகரிக்க தேவை ஏற்படாது. அதேநேரம் இந்த வரி வருமானங்கள் அனைத்தையும்  சேர்க்க முடியுமானால் எமக்கு 3 ரில்லியன் ரூபா வரை வருமானத்தை சேர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.  என்றாலும் சில அதிகாரிகள் வரி வருமானத்தை சேர்ப்பதற்கு பதிலாக வரிப் பணத்தை அவர்களின் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இவ்வாறான அதிகாரிகள் தொடர்பில்  அறிந்தால் அது தொடர்பாக  தகவல் தெரிவிக்க ஆணைக்குழுவில் முறையிடலாம்  எனவும் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement