நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்று நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார்.
இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதன் போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பான திட்ட வரைபினை தயாரித்து வழங்குமாறும் , அதனடிப்படையில் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இந்திய தூதுவர் வாக்குறுதியளித்தார்.
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்து தொடர்பாக இந்திய தூதுவரிடம் கோரிக்கை samugammedia நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்று நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார்.இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன் போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.இது தொடர்பான திட்ட வரைபினை தயாரித்து வழங்குமாறும் , அதனடிப்படையில் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இந்திய தூதுவர் வாக்குறுதியளித்தார்.