• May 10 2024

மீண்டும் சம்பந்தப்பட்ட சகலரையும் தேசிய பேரவைக்கு அழைக்க தீர்மானம்!

Tamil nila / Jan 20th 2023, 7:49 pm
image

Advertisement

அமைச்சரவையின் அனுமதியுடன் அண்மையில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்புக் குறித்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் முடிவொன்றை வழங்க வேண்டும் என மின்சார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்.


எனினும், முதலில் தேவையான கணக்கீடு பூர்த்திசெய்யப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.



இது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.


இவ்வாறு கலந்துரையாடலை நடத்தி எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் தேசிய பேரவைக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவை அழைத்து மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் சம்பந்தப்பட்ட சகலரையும் தேசிய பேரவைக்கு அழைக்க தீர்மானம் அமைச்சரவையின் அனுமதியுடன் அண்மையில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்புக் குறித்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் முடிவொன்றை வழங்க வேண்டும் என மின்சார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்.எனினும், முதலில் தேவையான கணக்கீடு பூர்த்திசெய்யப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுகலந்துரையாடி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.இவ்வாறு கலந்துரையாடலை நடத்தி எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் தேசிய பேரவைக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுமற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவை அழைத்து மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement